கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் பாலா என்ற இடத்தை சேர்ந்த மாணவர் ஜோஸ்வின். தற்போது, இவர் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவர் பெட்ரோல், எலக்ட்ரிக், சோலார் மூன்றிலும் இயங்கும் ஜீப்பை வடிவமைத்துள்ளார். இந்த காருக்கு இரண்டு சாவிகள் உண்டு. பெட்ரோலில் ஒடும் போது ஒரு சாவியை பயன்படுத்த வேண்டும். எலக்ட்ரிக் மற்றும் சோலாரில் இயங்கும் போது மற்றொரு சாவியை பயன்படுத்த வேண்டும். இந்த ஜீப்பில் சோலார் தகடுகளும் பொருத்தப்பட்டுள்ளன.
எலக்ட்ரானிக் ஹேண்ட் பிரேக்கும் உள்ளது. பழைய கார்களின் பொருட்களை பயன்படுத்தி இந்த ஜீப்பை ஜோஸ்வின் வடிவமைத்துள்ளார். இதை வடிவமைக்க 80 ஆயிரம் செலவாகியுள்ளது. மணிக்கு 60 கி.மீ வேகத்தில் இந்த ஜீப்பை இயக்கலாம். இந்த காரை கண்காட்சியில் வைக்க ஜோஸ்வின் முடிவு செய்துள்ளார். இது தவிர எலக்ட்ரிக் பைக், தேங்காய் பறிக்கும் கருவி, இன்குபேட்டர் போன்றவற்றையும் ஜோஸ்வின் வடிவமைத்துள்ளார். இதனை வடிவமைக்க கிட்டத்தட்ட 3 மாதங்கள் ஆகியுள்ளது.மேலும், 9 ஆம் வகுப்பு படிக்கும் போதே, இவர் பெட்ரோலில் ஓடும் காரையும் வடிவமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோஸ்வினின் தந்தை பிசினஸ் செய்து வருகிறார். தாயார் ஆசிரியை. பெற்றோர் கொடுத்த ஊக்கமே தன்னை புதிய புதிய பொருட்களை கண்டுபிடிக்கும் ஆர்வத்தை கொடுத்ததாக ஜோஸ்வின் கூறுகிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
விவசாயிகளுக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் : எடப்பாடி
கொங்கு ’உணவு’ பெஷ்டிவல் இல்ல… ’திருட்டு’ பெஷ்டிவல் – கொந்தளிக்கும் கோவை மக்கள்!