மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் பெட்ரோல் டீசல் விலை இரண்டு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டின் பல அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியை நிர்ணயிப்பது பெட்ரோல், டீசல் விலை தான்.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக கச்சா எண்ணெய்யின் விலை ஏறு இறங்கு முகத்திலிருந்தாலும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது.
663-வது நாளாக மாற்றம் இல்லாமல் இருந்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இரண்டு ரூபாய் குறைத்து மத்திய அரசு இன்று (மார்ச் 14) அறிவித்துள்ளது.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்கப்பட்டு வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டு ரூ.100.63க்கும், டீசல் ரூ.92.24 காசுக்கும் விற்பனையாகிறது.
மக்களவைத் தேர்தல் தேதி ஓரிரு தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
100 நாள் வேலை திட்ட நிலுவைத் தொகை: மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!
தள்ளுபடி விலையில் ஆவின் நெய்: மார்ச் இறுதி வரை நீட்டிப்பு!
நெற்றியில் பலத்த காயம் : மம்தாவுக்கு என்னாச்சு?