இந்தியாவில் டாடா கன்ஸ்யூமர் நிறுவனமும் பெப்சிகோ நிறுவனமும் பாக்கெட் ஸ்நாக்ஸ் விற்பனையில் முன்னணியில் உள்ளன. கேபிடல் நிறுவனத்திடம் இருந்து கடந்த ஆண்டு டாடா வாங்கிய சிங் சீக்ரட் மற்றும் பெப்சிகோவின் குர் குர் இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகின்றன.
கடந்த 2010 ஆம் ஆண்டு டாடாவும் பெசிகோவும் ஸ்னாக்ஸ் உற்பத்திக்காக கைகோர்த்தன. இதனால், நவுரிஷின்கோ என்ற புதிய நிறுவனம் உதயமானது. பின்னர், இந்த நிறுவனத்தின் பெப்சிகோ வைத்திருந்த பங்கையும் டாடா வாங்கி முழுமையாக கையகப்படுத்தியது. 2020 ஆம் ஆண்டு நவுரிஷின்கோவில் இருந்து பெப்சி விலகியது.
தற்போது, இந்திய சந்தையில் ஸ்னாக்ஸ் சந்தை மதிப்பு 42 ஆயிரம் கோடியாக உள்ளது. சமீபத்தில் IMARC Group தரப்பில் இருந்து நடத்தப்பட்ட ஆய்வில் 2032 ஆம் ஆண்டில் ஸ்னாக்சின் இந்திய சந்தை மதிப்பு 95 ஆயிரம் கோடியை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மீண்டும் டாடா கன்ஸ்யூமர் நிறுவனத்துடன் கை கோர்த்து செயல்ட பெப்சிகோ முடிவு செய்துள்ளது. தொடர்ந்து, பெப்சிகோவின் குர் குர் புதிய டேஸ்டுடன் சந்தையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
பேக் செய்யப்பட்ட ஸ்னாக்குகள் எளிதாக கிடைப்பது, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் தரத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படுவது, எளிமையான விநியோகம் போன்றவற்றால் ஸ்னாக்குகளில் சந்தை விரிவடைய முக்கிய காரணங்களாக அமைந்துள்ளது.
பெப்சிகோ தற்போது டாடா கன்ஸ்யூமர்ஸ் நிறுவனத்துடன் மட்டும் கை கோர்க்கவில்லை. சிங்கப்பூர் அரசின் முதலீட்டு நிறுவனமான டெமாசெக் உடன் இணைந்து, இந்திய ஸ்னாக்ஸ் நிறுவனமான ஹல்திராமில் பங்குகளை வாங்கவும் முடிவு செய்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….