PC turned robber

சூதாட்டத்தில் ரூ.42 லட்சம் இழப்பு: கொள்ளையனாக மாறிய கான்ஸ்டபிள்!

இந்தியா

சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த போலீஸ் கான்ஸ்டபிள், கடன் நெருக்கடியால் நெடுஞ்சாலைக் கொள்ளையனாக மாறிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மும்பை அருகிலுள்ள பிவாண்டி என்ற இடத்தில் இரண்டு நாள்களுக்கு முன்பு இரவில் விராரைச் சேர்ந்த பெரோஸ் ஷேக், ஆசிம் அஸ்லாம் ஆகியோர் மாலேகாவிலுள்ள தங்களது உறவினரைக் காண இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது ஒருவர் வழிமறித்து, துப்பாக்கியால் சுட்டுக் கொள்ளையடிக்க முயன்றிருக்கிறார். இதில் சிகிச்சை பலனளிக்காமல் ஆசிம் அஸ்லாம் இறந்துபோனார். மற்றொருவர் சயான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இதுகுறித்து பெரோஸின் தந்தை ரபீக், ‘என்னுடைய மகனும், உறவினர் ஆசிமும் விடுமுறையைக் கொண்டாட மாலேகாவுக்குச் சென்றுகொண்டிருந்தனர்.

அவர்கள் இரவில் பிவாண்டி அருகே சென்றபோது, ஒருவர் அவர்களின் ஸ்கூட்டரை நிறுத்தி, மெதுவாக ஓட்டும்படியும், சாலையில் ஆயில் கசிவு இருப்பதாகவும் குறிப்பிட்டார். அவர்களும் மெதுவாக ஓட்டினர்.

சாலையில் ஒரே இருட்டாக இருந்தது. இருவரும் சிறிது தூரம் சென்றதும், அதே நபர் மீண்டும் இருவரையும் நிறுத்தினார்.

அவர்கள் வண்டியை நிறுத்தியவுடன், முகக்கவசம் அணிந்திருந்த நபர், இரண்டு பேரிடமும் கையில் இருக்கும் அனைத்தையும் கொடுக்கும்படி கூறி, துப்பாக்கியைக் காட்டி மிரட்டினார்.

இருட்டு என்பதாலும், முகக்கவசம் அணிந்திருந்ததாலும் அவர்களிடம் துப்பாக்கிமுனையில் கொள்ளையடிக்க முயன்றவரின் முகத்தைச் சரியாகப் பார்க்க முடியவில்லை. வண்டியை பெரோஸ் ஓட்டினார்.

வண்டியின் பின்னால் இருந்த ஆசிம்மீது துப்பாக்கியால் சுட்டார் அந்த நபர். உடனே பெரோஸ் வண்டியை நிறுத்திவிட்டு இருட்டுக்குள் ஓடினார்.

அவரை விரட்டிச் சென்று துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். மொத்தம் எட்டு முறை துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். துப்பாக்கிச் சத்தம் கேட்டு பொதுமக்கள் கூடியதால், துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்’ என்றார்.

காயமடைந்த இரண்டு பேரையும் அங்கு கூடியிருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் ஆசிம் ஷேக் இறந்து போனார். மற்றொருவர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகிறார். இது குறித்துக் கேள்விப்பட்டதும் போலீஸார் விரைந்து வந்தனர்.

அந்த இடத்தில் அநாதையாக நின்ற இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்து விசாரித்து வந்தனர். இதில் அந்த வண்டிக்குச் சொந்தக்காரரைக் கண்டுபிடித்து விசாரித்தபோது, அவர் தனது வண்டியை போலீஸ் கான்ஸ்டபிள் சூரஜ் தேவ்ராம் என்பவரிடம் கொடுத்திருந்தது தெரியவந்தது. சூரஜ் தலைமறைவாக இருந்தார். அவரது மொபைல் சிக்னலை வைத்து போலீஸார் அகமத் நகரில் அவரைக் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், மொபைல் சூதாட்ட ஆப்பில் விளையாடியதில் ரூ.42 லட்சத்தை இழந்திருக்கிறார். அதற்காகக் கடன் வாங்கியிருக்கிறார். அந்தக் கடனை அடைக்க இது போன்று கொள்ளையடிக்கும் வேலையில் அவர் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராஜ்

லியோ பட பிரச்சனைகளுக்கு யார் காரணம்?: திருப்பூர் சுப்பிரமணியம் பதில்!

சீன அதிபர் ஜி ஜிங்பிங்கை சந்திக்கும் ரஷ்ய அதிபர் புதின்: காரணம் என்ன?

+1
0
+1
0
+1
2
+1
1
+1
0
+1
1
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *