சுப்ரியா சுலேவுக்கு புதிய பதவி!
தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் மகளும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்ரியா சுலே மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பிரபுல் பட்டேல் ஆகியோரை புதிய செயல் தலைவர்களாக சரத்பவார் இன்று நியமித்துள்ளார்.
கடந்த மாதம் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக சரத்பவார் அறிவித்தார். அந்த அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி சரத்பவார் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் கேட்டுக்கொண்டனர்.
இதனை தொடர்ந்து தனது ராஜினாமா முடிவை சரத்பவார் திரும்ப பெற்றார். இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 25-ஆம் ஆண்டு துவக்க விழா இன்று டெல்லியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சுலே மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பிரபுல் பட்டேல் ஆகியோரை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக நியமித்து சரத்பவார் அறிவித்தார்
அதன்படி சுப்ரியா சுலே மகாராஷ்டிரா, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளராகவும் பிரபுல் பட்டேல் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், கோவா ஆகிய மாநிலங்களின் பொறுப்பாளராக செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
’அவரு தூங்கல… கண்ண தான் மூடி இருந்தாரு’: லபுஷேனை கலாய்க்கும் ரசிகர்கள்!
தேசிய விளையாட்டுகளில் பங்கேற்காத தமிழக மாணவர்கள்: உதயநிதி விளக்கம்!