நாடு முழுவதும் இன்று (மே 7) நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50.71 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
நாடு முழுவதும் முதல் மற்றும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முறையே ஏப்ரல் 19 மற்றும் ஏப்ரல் 26 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இன்று அசாம், பீகார், சத்தீஸ்கர், கோவா, குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் மற்றும் தத்ரா-ஹவேலி-டாமன் & டையூ யூனியன் பிரதேசத்திலும் உள்ள 93 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
3 மணி நிலவரப்படி மொத்த தொகுதிகளிலும் சராசரியாக 50.71 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
- அசாம் – 63.08%
- பீகார் – 46.69%
- சத்தீஸ்கர் – 58.19%
- கோவா – 61.3%
- குஜராத் – 47.03%
- கர்நாடகா – 54.20%
- மத்திய பிரதேசம் – 54.09%
- மகாராஷ்டிரா – 42.63%
- உத்தர பிரதேசம் – 46.70%
- மேற்கு வங்காளம் – 63.11%
- தத்ரா நகர் ஹவேலி மற்றும் டாமன் டையூ – 52.40%
மதியம் 1 மணி நிலவரப்படி 39.92 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளதாக தகவல் வெளியான நிலையில், 3 மணி நிலவரப்படி 50.71 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இந்து
அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு ஒத்திவைப்பு – இடைக்கால ஜாமீன் மறுப்பு!
வைரமுத்து – இளையராஜா இடையே போர் : குஷ்பு பளீர் பதில்!