அதானி குழும விவகாரம்: முடங்கிய நாடாளுமன்றம்!

இந்தியா

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று அதானி குழும விவகாரம் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் முடங்கியது.

பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளில் குடியரசுத் தலைவர் உரையாற்றினார். இரண்டாம் நாளான நேற்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார்.

முன்றாம் நாளான இன்று குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதம் தொடங்கியது.

இந்நிலையில், திமுக எம்.பி. திருச்சி சிவா மற்றும் எதிர்க்கட்சியினர் அதானி குழும விவகாரம் குறித்து விவாதிக்க மாநிலங்களவையில் நோட்டீஸ் கொடுத்தனர்.

மக்களவையிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைத்து அவை நடவடிக்கைகளையும் ஒத்திவைத்துவிட்டு அதானி குழும விவகாரம், சீனாவின் எல்லை ஆக்கிரமிப்பு ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி மறுத்தார். இதனால் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை முடங்கியது. அதுபோன்று மாநிலங்களவையிலும் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் இரு அவையும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

அவையிலிருந்து வெளியே வந்த பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த காங்கிரஸ் தலைவரும், எம்.பி.யுமான மல்லிகார்ஜுன கார்கே, “பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட இழப்பு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும். இல்லையெனில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கண்காணிப்பில் ஒரு குழு விசாரிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

மக்களவை திமுக எம்.பி.கனிமொழி பேசுகையில், “அதானி குழும விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரிக்கை வைத்தோம். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்க சபாநாயகர் மறுப்புத் தெரிவித்தார். சாமானிய மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை” என்றார்.

பிரியா

ரூ.44 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை!

மாணவர்களுக்கான உணவை சாப்பிட்டு பார்த்து முதல்வர் ஆய்வு!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *