வருமான வரி செலுத்துவோர் பான் கார்டுடன் ஆதார் எண்ணை மே 31ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை இன்று (மே 29) மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பான் – ஆதார் இணைப்பு:
வருமான வரி செலுத்துவோரின் முக்கிய ஆவணங்களுள் ஒன்று பான் அட்டை. எனவே ஆதாருடன், பான் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டு இறுதியாக 2023ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதியுடன் இது முடிவடைந்தது.
அதன் பிறகு, ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கு, தாமத கட்டணமாக ரூ.1,000 வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து, ஆதாருடன் இணைக்கப்படாத பான் அட்டைகள் செயலற்றதாகி விடும் என வருவான வரித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
வருமான வரித்துறை எச்சரிக்கை:
இந்நிலையில், வருமான வரித்துறை மீண்டும் புதிய அறிவிப்பு ஒன்றை நேற்று (மே 28) எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டது.
அதில், “வருமான வரி செலுத்துவோர், தங்களின் பான் எண்ணுடன், ஆதார் எண்ணை மே 31ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும்.
தவறும்பட்சத்தில், இது வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். தொடர்ந்து, வருமான வரி தாக்கல் செய்வதற்கு ஜூன் 31ஆம் தேதி கடைசி நாளாகும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று (மே 29) வருமான வரித்துறை மீண்டும் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “அதிக விகிதத்தில் வரி பிடித்தங்களை தவிர்க்க மே 31ஆம் தேதிக்குள் பான் எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும்” என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக, ஏப்ரல் மாதம் வருமான வரித்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில், “மே 31ஆம் தேதிக்குள் பான் – ஆதார் இணைப்பு முடிவடைந்தால், டி.டி.எஸ்.க்கான குறுகிய கழிப்பிற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது.
தவறும்பட்சத்தில், டிடிஎஸ் இருமடங்காக பிடித்தம் செய்யப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உயரும் தங்கம் விலை.. வெள்ளி விலை தெரியுமா?
Share Market : பங்குச் சந்தை சரிவு – ரூ.3 லட்சம் கோடி இழப்பு… கவனம் செலுத்த வேண்டிய நிறுவனங்கள்!