ஒரே பேர்ல இரண்டு ‘பான் கார்டு’ வச்சிருக்கீங்களா? – இனிமேல் ரூ.10,000 ஃபைன்!

இந்தியா

ஒருவர் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டை இருந்தால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஏற்கனவே இருக்கும் நிரந்தர கணக்கு எண் அட்டையை மாற்றிவிட்டு, மேம்படுத்தப்பட்ட பான் அட்டையை வழங்கும் பான் 2.0 திட்டத்தை மத்திய அரசு ஒரு சில நாள்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. வரி செலுத்துவோருக்கும், பான் அட்டை வைத்திருப்பவர்களுக்கும் க்யூஆர் கோடு கொண்ட பான் அட்டை இலவசமாகவே வழங்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.

இந்த திட்டத்தின் மூலம், க்யூஆர் கோடு கொண்ட பான் அட்டை பயன்பாட்டுக்கு வருவதோடு, பல்வேறு பயன்பாடுகள் எளிதாக்கப்படும். அதுமட்டுமல்லாமல் ஒருவர் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டைகள் இருந்தாலும், ஒருவர் தனது பெயருடன் தவறான பான் அட்டையை இணைத்திருந்தாலும் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.

ஆனால், இவை எல்லாம் தெரியாமல் நடந்த தவறாக எடுத்துக்கொள்ளப்படாது. மாறாக அபராதம் விதிக்கப்படும். இந்த புதிய டிஜிட்டல் மயமாக்கப்படும் பான் அட்டை, பயன்பாட்டுக்கு வந்ததும், மிக எளிதாக போலி பான் அட்டைகளும், பான் அட்டைகளில் கொடுக்கப்பட்டிருக்கும் தவறான தகவல்களும் கண்டுபிடிக்கப்பட்டுவிடும்.

அதாவது வருமான வரித்துறை சட்டம் 1961-ன் 272 பி பிரிவின்படி, ஓர் இந்திய குடிமகன், ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டைகளை வைத்திருப்பதை தடை செய்கிறது. ஒருவேளை அவ்வாறு வைத்திருந்தால் அவர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

-ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 நியூஸ்: ரெட் அலர்ட் முதல் ‘சொர்க்கவாசல்’ படம் ரிலீஸ் வரை

கிச்சன் கீர்த்தனா: இறால் கஞ்சி

அரசியல் சூப்பர் ஸ்டார் : சீமானுக்கு வானதி சீனிவாசன் பதில்!

திருப்பூர் அதிமுக கவுன்சிலர்கள் கைது… எடப்பாடியை குற்றஞ்சாட்டிய கே.என்.நேரு

தற்கொலை… மனநல பிரச்சனை : விவகாரத்துக்கு பின் முதல்முறையாக பேசிய ரஹ்மான்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *