பாகிஸ்தானில் கோதுமை மூட்டைகளை கொண்டு செல்லும் லாரி ஒன்றை நூற்றுக்கணக்கானோர் துரத்தி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
https://twitter.com/NepCorres/status/1612528394750550035?
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பயங்கர மழையும், அதைத்தொடர்ந்து கட்டுங்கடங்காத வெள்ளமும் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால் கோடிக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நாசம் அடைந்தன. பயிர் சாகுபடி சுமார் 80 சதவிகிதம் வரை பாதிக்கப்பட்டது.
இதன் காரணமாக உணவு தானியங்களுக்கு அந்நாட்டில் பற்றாக்குறை ஏற்பட்டது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைப்போல இப்போது பாகிஸ்தானிலும் கடுமையான பொருளாதார நெருக்கடி, உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மக்களின் முக்கிய உணவாக இருக்கும் கோதுமை மாவு இஸ்லாமாபாத், பெஷாவர் நகரில் 20 கிலோ கோதுமை மாவு மூட்டை ரூ.2,800-க்கும் விற்பனை செய்தனர்.
தற்போது பாகிஸ்தான் அரசு விலையைக் கட்டுப்படுத்தத் தவறியதால், நாட்டின் பல பகுதிகளில் 20 கிலோ கோதுமை மாவு மூட்டை ரூ.3,100-க்கும் விற்கப்படுகிறது.
அரசின் சார்பில் மானிய விலையில் உணவு தானியங்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் அங்கும் ஏராளமானோர் முண்டியடித்து சென்று வாங்கும் நிலை உள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தானில் கோதுமை மூட்டைகளை கொண்டு செல்லும் லாரி ஒன்றை நூற்றுக்கணக்கானோர் துரத்தி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
பொருளாதார நெருக்கடியால் பாகிஸ்தானில் உணவுப்பொருட்கள், மண்ணெண்ணெய், காய்கறிகள் ஆகியவற்றின் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ சர்க்கரை ரூ.155, ஒரு கிலோ வெங்காயம் ரூ.280, ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு, மின்சார கட்டணம், எரிபொருள் பற்றாக்குறை ஆகியவற்றால் உணவகங்களில் விலை மிகவும் அதிகரித்துள்ளது.
நடுத்தர வர்க்கம் மற்றும் சாமானிய மக்களின் நிலைமை மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் அந்நாட்டு மக்களுக்கு அந்நாட்டில் உள்ள தன்னார்வலர்கள் உதவி வருகின்றனர்.
சீனா, சவுதி அரேபியா மற்றும் உலக நாடுகளின் உதவியை பாகிஸ்தான் எதிர்நோக்கியுள்ளது.
-ராஜ்
ஆரியத்தின் பதற்றம்: ஆளுநரின் சனாதன தர்ம புரட்டு
கடிக்கவந்த நாய்; பயத்தில் மூன்றாவது மாடியிலிருந்து குதித்த உணவு டெலிவரி இளைஞர் பலி!