பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் டாலர்கள் – இந்திய மதிப்பில் சுமார் ரூ.24,000 கோடி கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது.
பாகிஸ்தானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்கள், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளதால் அந்நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வர பாகிஸ்தான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐ.எம்.எஃப்) கடன் உதவி வழங்கும்படி பாகிஸ்தான் அரசு கோரிக்கை விடுத்தது.
கடன் வழங்க ஐ.எம்.எஃப் பல்வேறு நிபந்தனைகளை விதித்ததையடுத்து இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் – இந்திய மதிப்பில் சுமார் ரூ.24,000 கோடி கடன் உதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது. முதல் கட்டமாக 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.9,800 கோடி) வழங்கப்பட உள்ளது. மீதமுள்ள தொகை அடுத்த ஒன்பது மாதங்களில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்கிய நாடுகளின் பட்டியலில் நான்காவது இடத்தில் பாகிஸ்தான் உள்ளது. இந்தப் பட்டியலில் அர்ஜென்டினா முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது, மூன்றாவது இடங்களில் எகிப்தும், உக்ரைனும் உள்ளன. சீனா, ஐந்தாவது இடத்திலும், ரஷ்யா, ஆறாவது இடத்திலும், இந்தியா ஏழாவது இடத்திலும் உள்ளது.
ராஜ்
கிச்சன் கீர்த்தனா: சிவப்பு அவல் உப்புமா