பாகிஸ்தான் ராணுவத்தை விமர்சித்ததாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்திற்கு வெளியே அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊழல் மற்றும் ராணுவம் குறித்து அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ) தலைவருமான இம்ரான் கான் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் இன்று (மே 9) ஆஜரானார்.
இந்நிலையில் அவர் உயர் நீதிமன்றத்திற்கு வெளியே ராணுவத்தினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இம்ரான் கானை ராணுவத்தினர் சூழ கைதுசெய்யப்படும் காட்சி சமூக ஊடகங்களில் தற்போது வெளியாகி உள்ள நிலையில் அந்நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பிடிஐ மூத்த தலைவரான அசார் மஷ்வானி, 70 வயதான இம்ரான் கான் நீதிமன்றத்திற்குள் இருந்து ரானுவத்தினரால் கடத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் அவர் நாட்டில் உடனடியாக போராட்டங்களை நடத்துவதற்கு கட்சி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
மணிப்பூரில் சிக்கிய தமிழர்களை மீட்க முதல்வர் உத்தரவு!
அமைச்சரவை மாற்றமா… நான் நிதியமைச்சரா?: துரைமுருகன் பதில்!