தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் அஜித்குமார், கலைஞர் வேலு ஆசான், கிரிக்கெட் வீரர் அஸ்வின் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் அரசியல், கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.
அந்தவகையில், குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த வருடம்(2025) 7 பத்ம விபூஷண் விருதுகள், 19 பத்ம பூஷண் விருதுகள், 113 பத்ம ஸ்ரீ விருதுகள் என மொத்தம் 139 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது தமிழர்கள் யாருக்கும் அறிவிக்கப்படவில்லை.
🔻இரைப்பைக் குடலியல் நிபுணர் துவ்வூர் நாகேஷ்வர் ரெட்டி (ஆந்திரா)
🔻முதல் சீக்கிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜகதீஷ் சிங் கேஹர் (பஞ்சாப்)
🔻கதக் நடனக் கலைஞர் குமுதினி ரஜினிகாந்த் லக்கியா (குஜராத்)
🔻வயலின் இசைகலைஞர் லட்சுமிநாராயண சுப்பிரமணியம் (கர்நாடகா)
🔻மறைந்த எழுத்தாளர் எம்டி வாசுதேவன் நாயர் (கேரளா)
🔻மறைந்த தொழிலதிபர் ஒசாமு சுசுகி (ஜப்பான்)
🔻மறைந்த நாட்டுப்புற பாடகி சாரதா சின்ஹா (பீகார்)
பத்ம பூஷண் விருது :
பதம பூஷன் விருதுகளை பொறுத்தவரையில் 19 பேர் பெறும் நிலையில், தமிழக தொழில் துறையில் பங்காற்றிய நல்லி குப்புசாமிக்கும், கலைத் துறையில் நடிகர் அஜித் குமார் மற்றும் சோபானா சந்திரகுமார் ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இலக்கிய/கல்வித்துறை
சூர்ய பிரகாஷ்
பிபேக் டெப்ராய் (மரணத்திற்குப் பின்)
ராம்பகதூர் ராய்
மருத்துவத்துறை
ஜோஸ் சாக்கோ பெரியபுரம்
தொல்லியல் துறை
கைலாஷ் நாத் தீட்சித்
தொழில்துறை
நல்லி குப்புசாமி செட்டி
பங்கஜ் படேல்
விளையாட்டுத்துறை
பிஆர் ஸ்ரீஜேஷ்
கலைத்துறை
அஜித் குமார்
பங்கஜ் உதாஸ் (மரணத்திற்குப் பின்)
சேகர் கபூர்
ஷோபனா சந்திரகுமார்
நந்தமுரி பாலகிருஷ்ணா
அனந்த் நாக்
ஜதின் கோஸ்வாமி
அறிவியல்
வினோத் தாம்
சமூகசேவை
சாத்வி ரிதம்பர
மக்கள் பணி
மனோகர் ஜோஷி (மரணத்திற்குப் பின்)
சுஷில் குமார் மோடி (மரணத்திற்குப் பின்)
பத்ம ஸ்ரீ விருது :
நாட்டின் 4வது உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருதை பொறுத்தவரையில் தமிழகத்தைச் சேர்ந்த 9 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த வேலு ஆசான் (கலை), குருவாயூர் துரை (கலை), கே.தாமோதரன் (சமையற்கலை), லட்சுமிபதி ராமசுப்பையர் (இலக்கியம் – கல்வி – இதழியல்), எம்.டி.ஸ்ரீனிவாஸ் (அறிவியல் – கட்டிடக் கலை), புரசை கண்ணப்ப சம்பந்தன் (கலை), ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி (கலை) மற்றும் ஸ்ரீனி விஸ்வநாதன் (இலக்கியம் – கல்வி), கிரிக்கெட் வீரர் அஸ்வின் (விளையாட்டு) ஆகியோர் பத்மஸ்ரீ விருது பெற உள்ளனர்.