நிலக்கரி உற்பத்தி அதிகரிப்பு: அமைச்சகம் அறிவிப்பு! 

இந்தியா

இந்தியாவின் ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தி 2021 ஆகஸ்ட்டுடன் ஒப்பிடும்போது, 53.88 மில்லியன் டன்னிலிருந்து 8.27 சதவீதம் அதிகரித்து 58.33 டன்னாக உள்ளது என நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்று (செப்டம்பர் 5) மத்திய நிலக்கரி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில்,  “தற்காலிக புள்ளிவிவரங்களின்படி,

ஆகஸ்ட் 2022-ல், கோல் இந்தியா நிலக்கரி கழகம் மற்றும் இதர பெரிய நிலக்கரி சுரங்கங்கள் முறையே, 46.22 மில்லியன் டன் மற்றும் 8.02 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்து 8.49% மற்றும் 27.06% வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.

இருப்பினும், இந்திய அரசுக்கு சொந்தமான சிங்கரேணி காலியரீஸ் கம்பெனி லிமிடெட், ஆகஸ்ட் மாதத்தில் 17.49 சதவீதம் எதிர்மறையான வளர்ச்சியை பதிவு செய்தது.

நாட்டில் நிலக்கரி உற்பத்தி செய்யும் முன்னணி சுரங்க நிறுவனங்களில் 25 சுரங்கங்கள் 100 சதவீதம் அளவுக்கு வளர்ச்சியை பதிவு செய்தன. அதேசமயம், 5 சுரங்கங்களின் உற்பத்தி அளவு 80% முதல் 100% வரை இருந்தது.

இந்நிலையில்  நிலக்கரி விநியோகம், ஆகஸ்ட் 2021-டுடன் ஒப்பிடும் போது, ஆகஸ்ட் 2022-ல் 60.18 மில்லியன் டன்னிலிருந்து 63.43 மெட்ரிக் டன் அளவுக்கு, 5.41 சதவீதம் அதிகரித்துள்ளது.

மின் தேவையின் அதிகரிப்பால், ஆகஸ்ட் 2021-ல் 48.80 மில்லியன் டன்னுடன் ஒப்பிடும்போது, ஆகஸ்ட் 2022-ல் 10.84 சதவீதம் அதிகரித்து, 54.09 மில்லியன் டன்னாக உள்ளது.

ஆகஸ்ட் 2021-ல் உற்பத்தி செய்யப்பட்ட மின்உற்பத்தியை விட, ஆகஸ்ட் 2022-ல் ஒட்டுமொத்த மின்உற்பத்தி 3.14 சதவீதம் உயர்ந்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வேந்தன்

நிலக்கரி கொண்டு செல்வதில் தெற்கு ரயில்வே சாதனை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *