மணிப்பூர் வீடியோவை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மணிப்பூரில் மெய்தேய் மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே வன்முறை மோதல்கள் நிலவி வரும் நிலையில், நேற்றிலிருந்து சமூக வலைதளங்களில் இரண்டு பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக இழுத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த சம்பவம் இரு மாதங்களுக்கு முன்பு, அதாவது மே 4ஆம் தேதியே நடந்திருப்பதாகவும், குற்றம் செய்தவர்கள் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை, கடத்தல் மற்றும் கொலை வழக்கு பதிவு செய்திருப்பதாகவும் மணிப்பூர் போலீஸ் கூறியுள்ளது. தௌபல் மாவட்டத்தில் உள்ள நோங்போக் செக்மாய் காவல் நிலைய போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மே 3ஆம் தேதி இரு சமூகத்தினரிடையே மோதல், வன்முறை தொடங்கிய அடுத்த நாள் இப்படி ஒரு கொடூரம் நடந்திருக்கிறது. இதுதொடர்பான வீடியோ வெளியாகியிருக்கும் நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தொடங்கி சாதாரண பொதுமக்கள் வரை இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மணிப்பூர் வீடியோவை பகிர வேண்டாம் எனவும் அவற்றை நீக்க வேண்டும் எனவும் ட்விட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் செயல்பட்டு வரும் சமூக ஊடகங்கள் இந்திய சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்றும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதுபோன்று இந்த வீடியோ தொடர்பாக மத்திய அரசு ட்விட்டர் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரியா
மணிப்பூர் சம்பவம்: எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு நோட்டீஸ்!
மணிப்பூர் கொடூரம்: முக்கிய குற்றவாளி கைது!
Comments are closed.