இந்தியாவில் உருமாறிய கொரோனா: அச்சத்தில் மக்கள்!

சீனாவில் பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி மக்கள் அனைவரையும் வீட்டிற்குள் முடக்கிவைத்தது. அதுமட்டுமின்றி பல உயிர்களையும் பலி வாங்கியது என்பதும் நாம் அறிந்ததே.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த சில மாதங்களாகத்தான் மக்கள் ஊரடங்கு இன்றி சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால் கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் முழுமையாகக் குறையவில்லை.

இந்நிலையில் கடந்த சில தினங்களாகச் சீனாவில் உருமாறிய பி.எஃப்-7 ஒமைக்ரான் கொரோனா தொற்று பரவத் தொடங்கி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனால் சீனாவில் மீண்டும் ஊரடங்கு போடப்பட்டு மக்கள் வீட்டிற்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சீனாவில் பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் பரவ தொடங்கியுள்ளது. குஜராத்தில் உள்ள 2 பேருக்கும் ஒடிசாவில் உள்ள ஒருவருக்கும் இந்த உருமாறிய பி.எஃப்-7 ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இன்று (டிசம்பர் 21) மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தடுப்பு நடவடிக்கை மற்றும் தொற்றைக் கண்டறியும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்த வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மோனிஷா

”முட்டை விற்க செல்லுங்கள்…” இந்திய வீரர்களை எச்சரித்த கபில்தேவ்

எல்லைப் பிரச்சினை: கர்நாடகாவுக்கு மகாராஷ்டிரா பதிலடி!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts