பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் பிரதமர் மோடியின் கடைசி உரை!

அரசியல் இந்தியா

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்று (செப்டம்பர் 18) துவங்கியுள்ளது. நாளை முதல்  சிறப்புக் கூட்டத்தொடர் நடவடிக்கைகள் அனைத்தும்  புதிய கட்டிடத்துக்கு மாற்றப்பட உள்ளது.

இந்த நிலையில் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் இன்று அதன் 75 ஆண்டுகால பயணத்தை குறிக்கும் வகையில்,  சாதனைகள், அனுபவங்கள், நினைவுகள் ஆகியவை குறித்து  விவாதிக்கப்படுகிறது.

காலை 11 மணிக்கு பழைய நாடாளுமன்றத்தில் அவை தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் உறுப்பினர்களின் மைக் அணைக்கப்பட்டதால் அமளியில் ஈடுபட்டனர்.

அதனை ’தொழில்நுட்பக் கோளாறு’ என்று கூறி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மன்னிப்புக் கேட்டார்.

எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு முடிந்ததும், பழைய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தனது கடைசி உரையை ஆரம்பித்தார்.

ஜி20: 140 கோடி குடிமக்களின் வெற்றி!

அவர் பேசுகையில், “75 ஆண்டுகால நாடாளுமன்றப் பயணத்தை நினைவுகூர்ந்து முன்னோக்கிச் செல்ல வேண்டிய தருணம் இது. இன்று அனைத்து இந்தியர்களின் சாதனைகள் எங்கும் விவாதிக்கப்படுகின்றன.

சந்திரயான்-3 இன் வெற்றி இந்தியாவை மட்டுமல்ல, உலகையும் பெருமைப்படுத்தியுள்ளது. தொழில்நுட்பம், அறிவியல், நமது விஞ்ஞானிகளின் திறன் மற்றும் நாட்டில் உள்ள 140 கோடி மக்களின் வலிமை ஆகியவற்றுடன் இணைந்த இந்தியாவின் புதிய வடிவத்தை இது எடுத்துக்காட்டுகிறது. இன்று, நான் மீண்டும் நமது விஞ்ஞானிகளை வாழ்த்த விரும்புகிறேன்.

நீங்கள் அனைவரும் G20யின் வெற்றியை ஒருமனதாகப் பாராட்டியுள்ளீர்கள். நான் உங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜி20யின் வெற்றி நாட்டின் 140 கோடி குடிமக்களின் வெற்றிக்கு உரியது அது தனிநபருக்கோ அல்லது தனிப்பட்ட அரசியல் கட்சிக்கோ உரியது அல்ல. இந்தியா தலைமையில் நடைபெற்ற ஜி20 கூட்டமைப்பில் ஆப்பிரிக்க யூனியனைச் சேர்த்தது எனக்கு உணர்ச்சிகரமான தருணம். அதை என்னால் மறக்க முடியாது.

இந்தியாவின் அர்ப்பணிப்புக்கு சான்று!

நாம் நாளை புதிய நாடாளுமன்றத்திற்கு செல்லலாம், ஆனால் பழைய நாடாளுமன்ற கட்டிடமான இது வரவிருக்கும் தலைமுறைக்கு ஊக்கமூட்டுவதற்கான புதிய அடையாளமாக இருக்கும்.

இது நம் நாட்டு மக்களின் வியர்வை, உழைப்பு மற்றும் பணத்தால் கட்டப்பட்டது. காலனித்துவ காலத்தில் கட்டப்பட்டாலும், பயன்படுத்தப்பட்ட வளங்கள் இந்தியாவிற்கு உடையவை என்பதால், ஜனநாயகத்திற்கான இந்தியாவின் அர்ப்பணிப்புக்கு இந்த கட்டிடம் ஒரு சான்றாக உள்ளது.

நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை!

நாம் புதிய வளாகத்திற்குச் செல்வதற்கு முன், இந்த பாராளுமன்ற கட்டிடத்துடன் தொடர்புடைய உத்வேகமான தருணங்களை நினைவில் கொள்ள வேண்டிய நேரம் இது.

இந்த கட்டிடத்தில் உறுப்பினராக நான் முதன்முதலில் நுழைந்தபோது, ஜனநாயகத்தின் கோவிலை வணங்கி மரியாதை செய்தேன். அது எனக்கு உணர்ச்சிகரமான தருணம். ரயில்வே பிளாட்பாரத்தில் டீ விற்ற ஒரு ஏழை குழந்தை நாடாளுமன்றத்தில் நுழைய முடியும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. மக்களிடமிருந்து இவ்வளவு அன்பைப் பெறுவேன் என்றும் நான் என்றும் நினைக்கவில்லை.

இந்த கட்டிடத்திலிருந்து விடைபெறும் உணர்வுபூர்வமாக இருக்கிறது. பல கசப்பான மற்றும் இனிப்பான நினைவுகள் அதனுடன் இணைந்துள்ளன.

நாம் அனைவரும் இந்த பாராளுமன்றத்தில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் மற்றும் கடுமையான விவாதங்களையும் கண்டுள்ளோம். ஆனால் அதே நேரத்தில் ஒரே குடும்பமாகவும் இருக்கிறோம்.

நேரு முதல் சாஸ்திரி, மன்மோகன் சிங் வரை அனைவரும் பழைய நாடாளுமன்றத்துக்குப் முக்கியப் பங்காற்றியவர்கள். அவர்கள் இந்தியாவைப் பற்றிய தங்கள் பார்வையை எடுத்துரைத்ததை இந்த பாராளுமன்றம் கண்டிருக்கிறது.

ஜனநாயகத் தாய் மீது நடத்தப்பட்ட தாக்குதல்!

இந்த பாராளுமன்றத்தின் மீது பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இது கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல. ஒருவகையில், இது ஜனநாயகத்தின் தாய் மீது, நம் உயிருள்ள ஆன்மா மீது நடத்தப்பட்ட தாக்குதல். அந்தச் சம்பவத்தை நாடு மறக்க முடியாது.

பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடும் போது, நாடாளுமன்ற உறுப்பினர்களையும் காக்க, நெஞ்சில் குண்டுகளை வாங்கி பலியானவர்களை நான் தலைவணங்குகிறேன்” என, பிரதமர் மோடி கூறினார்.

கிறிஸ்டோபர் ஜெமா

வன்னியர் இடஒதுக்கீடு: முதல்வருக்கு ராமதாஸ் கோரிக்கை!

புதிய பயணம்: சிறப்பு கூட்டத்தொடருக்கு முன் பிரதமர் மோடி பேட்டி!

 

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *