ரயில் விபத்து… சிதறி கிடந்த காதல் கடிதம்: இதயத்தை நொறுக்கும் வரிகள்!

இந்தியா டிரெண்டிங்

ரயில் விபத்தில் சிதறி கிடந்த காதல் கடிதம் ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் அதில் எழுதப்பட்டிருந்த வரிகள் இதயத்தை நொறுக்குவதாக அமைந்துள்ளது.

ஒடிசாவில் நேற்று முன்தினம் இரவு 3 ரயில்கள் மோதிய ரயில் விபத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 275ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காயமடைந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே, விபத்து நடந்த இடத்தில் சிதறிக் கிடந்த பொருட்கள் ஒவ்வொன்றும் கண்கலங்கா கல்நெஞ்சக்காரர்களின் கண்களையும் கலங்கடிக்கும் விதமாக உள்ளது.

அந்த வகையில், மீட்பு பணியின்போது தண்டவாளத்தின் சில அடி தூரத்துக்குள் ஒரு பயணியின் பை கிடைத்தது. அதில் ஒரு நோட் புக் இருந்தது. அதை பிரித்து பார்த்த போது அங்கு மீட்பு பணியில் ஈடுபட்ட மீட்பு குழுவினரின் கண்கள் குளமாகியது.

காரணம், அந்த நோட்டு புத்தகத்தில் இடம்பெற்று இருந்தது அனைத்தும் காதல் கவிதைகள். சிவப்பு, நீலம், பச்சை என்று பல வண்ணங்களில் பெங்காலி மொழியில் எழுதப்பட்டிருந்த அந்த காதல் கடிதத்தில் எழுதப்பட்டிருந்த ஒவ்வொரு வரியும்,

காதலையும், காதலின் ஏக்கத்தையும் வெளிப்படுத்துவதாக உள்ளது.
அதில் ஒரு வரியில், “சிறிய மேகங்கள் மழையை உருவாக்குகின்றன. சிறிய கதைகள் அன்பை உருவாக்குகின்றன” என்று எழுதப்பட்டுள்ளது.


எழுதியவர் பற்றிய எந்த விவரங்களும் தெரியவில்லை. ஆனால் அவரின் காதலின் அடையாளமான கடிதங்கள் மட்டும் இருக்கிறது.

மேலும், அங்கு குழந்தைகளுக்காக ஒரு பயணி வாங்கி வைத்திருந்த சாக்லேட் மற்றும் பொம்மைகளும் ரத்த கறை படிந்த ஆடைகளுக்கு மத்தியில் கிடந்தது அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ஒடிசா ரயில் விபத்து: தகவல் கிடைக்காத 8 தமிழர்களின் நிலை என்ன?

ஜூன் 7ஆம் தேதி கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெறும்: திமுக

+1
0
+1
0
+1
0
+1
3
+1
2
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *