கிச்சன் கீர்த்தனா: ஓட்ஸ் – புரூக்கோலி சூப்

இந்தியா

வீக் எண்டில் வித்தியாசமான சூப் சாப்பிடலாம் என்று நினைப்பவர்களுக்கான பெஸ்ட் சாய்ஸ் இந்த  ஓட்ஸ் – புரூக்கோலி சூப். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்கும் இந்த சூப், அனைவருக்கும் ஏற்றது.

என்ன தேவை?

ஓட்ஸ் – அரை கப்
புரூக்கோலி – 3 மொட்டுகள்
ஓமம் – அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் – ஒன்று
பிரிஞ்சி இலை – ஒன்று
இஞ்சி – ஒரு அங்குலத் துண்டு (தட்டியது)
பால் – ஒரு கப்
சர்க்கரை – அரை டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகுத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்
வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப

எப்படிச் செய்வது?

பிரஷர் பானில் வெண்ணெயை சூடாக்கி, பிரிஞ்சி இலை, புரோக்கோலி மொட்டு களைச் சேர்த்து சில நிமிடங்கள் கிளறி, ஒரு கப் பால், ஓட்ஸ், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து  குறைந்த தீயில் ஒரு விசில் வரும்வரை வேக விடவும். பிறகு இஞ்சி, மிளகாயை நீக்கிவிட்டு (இல்லையென்றால் மிகவும் காரமாக இருக்கும்), கலவையை மிக்ஸியில் விழுதுபோல் அரைத்து, பெரிய கண் உள்ள வடிகட்டியின் மூலம் வடிகட்ட வும். மீண்டும் அடுப்பில் வைத்து  உப்பு, சர்க்கரை, ஓமம், தேவையெனில் பால் (அ) தண்ணீர் சேர்த்து குறைந்த தீயில் ஒரு கொதி விடவும். பரிமாறுவதற்கு முன் மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகுத்தூள் தூவவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: வெஜ் – ஹெல்த் சூப்

கிச்சன் கீர்த்தனா: டொமேட்டோ – பிரெஞ்ச் ஆனியன் சூப்

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

1 thought on “கிச்சன் கீர்த்தனா: ஓட்ஸ் – புரூக்கோலி சூப்

  1. நீங்க படத்தில் காட்ர அளவு சூப்பரா இல்ல..ஓரளவுக்கு ஓகே மேடம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *