சித்ரா ராமகிருஷ்ணனுக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு!

இந்தியா

பங்குச் சந்தை ஊழல் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட முன்னாள் தேசிய பங்குச்சந்தை தலைவர் சித்ரா ராமகிருஷ்ணன் ஜாமீன் மனுவை டெல்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2013-16ஆம் ஆண்டுக் காலத்தில் தேசிய பங்குச்சந்தை தலைவராக சித்ரா ராமகிருஷ்ணன் பணியாற்றினார்.

அந்த காலக் கட்டத்தில், பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன.

எந்தவித முன் அனுபவமும் இல்லாத ஆனந்த் சுப்பிரமணியன் என்பவரை  சீப் ஸ்ட்ரேடஜிக் ஆபிசராகவும் தனது ஆலோசகராகவும் பணியமர்த்தி, ஏராளமான சலுகைகளையும் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தன.

இந்நிலையில், தேசிய பங்குச்சந்தை விவரங்களை இமயமலையில் இருக்கும் சாமியார் ஒருவருக்குக் கசியவிட்டதன் காரணமாக,

முன்னாள் தேசிய பங்குச்சந்தை தலைவர் சித்ரா ராமகிருஷ்ணன், ரவி நரேன் மற்றும் அவரது ஆலோசகர் ஆனந்த் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பிப்ரவரி 18 ஆம் தேதி சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியது.

இதனைத் தொடர்ந்து, மும்பையில் சிபிஐ அதிகாரிகள் சித்ரா ராமகிருஷ்ணன் மற்றும் இமயமலையில் வசிப்பதாக சொல்லப்படும் சாமியாருக்கு இடையேயான மின்னஞ்சல்களை ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகளால் ஆனந்த் சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டார்.

இதனால், சித்ரா ராமகிருஷ்ணன் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்தார்.

ஆனால் அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தொடர்ந்து சித்ரா ராமகிருஷ்ணனை மார்ச் 6 ஆம் தேதி டெல்லியில் வைத்து சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

இதையடுத்து சித்ரா ராமகிருஷ்ணன் ஜாமீன் கேட்டு கடந்த மே மாதம் தொடர்ந்த மனுவை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் அகர்வால் ஜாமீன் வழங்குவதற்கான போதிய காரணங்கள் மனுவில் இல்லை என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார்.

இதையடுத்து மீண்டும் சித்ரா ராமகிருஷ்ணன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.

முன்னதாக, இதே வழக்கில் கைது செய்யப்பட்ட மும்பை காவல் முன்னாள் ஆணையர் சஞ்சய் பாண்டேவின் ஜாமீன் மனுவும் தள்ளுபடியான நிலையில், இன்று சித்ரா ராமகிருஷ்ணனின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மோனிஷா

டெல்லி துணை முதல்வருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்: விரைவில் கைது!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

1 thought on “சித்ரா ராமகிருஷ்ணனுக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு!

  1. அமைச்சருங்க நீதிமன்றத்துக்கு வரும்போது மட்டும் அங்கேயே படம் எடுத்து போடறீங்க; இவங்களுக்கும் மட்டும் ஆபிசுல போஸ் குடுக்கற படத்த போடறீங்க, நல்லா இருக்கே உங்க நியாயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *