இனவெறி தாக்குதல்: தீவிர சிகிச்சையில் இந்திய மாணவர்!

இந்தியா

ஆஸ்திரேலியாவில் 28 வயது இந்திய மாணவர் ஒருவர் கத்தியால் பல முறை குத்தப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது அங்குள்ள இந்தியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் இனவெறி தாக்குதல் என்பது தற்போது சர்வசாதாரணமாகி விட்டது. இந்தியாவில் இருந்து செல்பவர்களுக்கு அங்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துவருகிறது.

ஷுபம் கார்க் என்ற இந்திய மாணவர், அங்குள்ள சாலையில் நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத ஒரு நபர் அவரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

ஷுபம் மறுத்ததால், அந்த நபர் அவரை பலமுறை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார்.

இந்நிலையில், மாணவர் ஷுபம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவருடைய குடும்பத்தினர் ANI செய்தி நிறுவனத்திற்கு இன்று (அக்டோபர் 14 ) அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவரின் பெற்றோர்கள் கூறுகையில்: “ஆஸ்திரேலிய காவல்துறை, தாக்குதல் நடத்திய 27 வயது டேனியல் நோர்வூட் என்ற நபரை கைதுசெய்துள்ளது. அவர்மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டிருக்கிறது.

கைதுசெய்யப்பட்ட நபரை என் மகனுக்கோ, அவன் நண்பர்களுக்கோ அடையாளம் தெரியவில்லை. இது இனவெறித் தாக்குதலாகத்தான் இருக்க வேண்டும்.

என் மகனை காண கடந்த ஒரு வாரமாக என் குடும்பம் விசாவுக்காக அலைந்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் இதுவரை எதுவும் நடைபெறவில்லை. எனவே, எங்களுக்கு இந்திய அரசு உதவ வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

nri study expect matter seriously stabbing indian student australia

இந்தச் சம்பவம் தொடர்பாக ஆக்ரா மாவட்ட நீதிபதி நவ்நீத் சாஹல், ”பாதிக்கப்பட்டவரின் சகோதரரின் விசா விண்ணப்பம் செயலாக்கத்தில் உள்ளது.

இந்திய நிர்வாகம் வெளியுறவு அமைச்சகத்துடன் ஒருங்கிணைத்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. விசாவுக்காக சிட்னியிலுள்ள தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி இன்று (அக்டோபர் 14 ) செய்தியாளர்கள் சந்திப்பின்போது, “இது ஒரு சோகமான சம்பவம்.

அவர் (கார்க்) மருத்துவமனையில் இருக்கிறார் மற்றும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விவகாரம் தீவிரமாகக் கையாளப்பட்டு, குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று அவர் கூறினார்.

தொடர்ந்து அவர், “இந்திய தூதரகம் ஷுபம் கார்க்கின் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் இருக்கிறது. மேலும், அவர்களின் ஆஸ்திரேலியா பயணத்தை விரைவுபடுத்தவும் முயற்சி செய்து வருகிறோம்” எனக் கூறியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

அரசு விழாவில் தமிழக அமைச்சரோடு பாஜக தலைவர்

ஒரே இடத்தில் தந்தை, மகள் உடல்: நெஞ்சை பிசையும் சோகம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *