2022ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசை இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக பெற்றுள்ளார்.
உலகின் பல்வேறு நாடுகளிலும் அதன் பிராந்திய மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும் நாவலுக்கு ஆண்டுதோறும் புக்கர் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டிற்கான புக்கர் பரிசு இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக பெற்றிருக்கிறார்.
இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசுக்கு, உலகம் முழுவதிலும் இருந்து 169 நாவல்கள் விருதுக்காக சமர்ப்பிக்கப்பட்டன. இதில், இறுதிப் போட்டிக்கு தேர்வான 6 புத்தகங்களில் இருந்து இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக எழுதிய நாவலுக்கு இந்த ஆண்டிற்கான புக்கர் பரிசு அறிவிக்கப்பட்டது.
புக்கர் பரிசை பெறும் இரண்டாவது இலங்கை எழுத்தாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. புக்கர் விருதை வென்றதற்காக 50,000 பவுண்ட் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.
அவரது “தி செவன் மூன்ஸ் ஆப் மாலி அல்மேடா” (மாலி அல்மேடாவின் ஏழு நிலவுகள்) என்ற புனைகதைக்காக புக்கர் பரிசு கிடைக்கப் பெற்றுள்ளது. விடுதலைப் புலிகள் – இலங்கை ராணுவம் இடையே நடந்த போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையை அடிப்படையாக வைத்து இந்த நாவலை அவர் ஒரு புனைக்கதையாக எழுதியுள்ளார்.
ஜெ.பிரகாஷ்
ஆறுமுகசாமி ஆணையம் கடந்து வந்த பாதை!
மும்பை இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர் வாபஸ் பெற்றது ஏன்?