அரசு பங்களாவை காலி செய்ய ராகுலுக்கு நோட்டீஸ்!

Published On:

| By Kavi

டெல்லியில் உள்ள அரசு இல்லத்தை காலி செய்யுங்கள் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

2019 நாடாளுமன்ற தேர்தலின் போது மோடி சமூகத்தை அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதனால் அவரது எம்.பி பதவி பறிக்கப்பட்டது. ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ததற்கு நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம் நடத்தியது.
இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ராகுல் காந்தி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து கலந்துகொண்டனர். தமிழக சட்டப்பேரவைக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கருப்பு உடை அணிந்து வந்திருந்தனர்.


இந்நிலையில் டெல்லியில் உள்ள அரசு இல்லத்தை காலி செய்யுமாறு ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. டெல்லியில் துக்ளக் லேன் என்று அழைக்கப்படும் தெருவில் இரண்டாம் எண் பங்களாவில் ராகுல் காந்தி வசித்து வருகிறார். இந்த பங்களா 2004ஆம் ஆண்டு ராகுல் காந்திக்கு ஒதுக்கப்பட்டது.
தற்போது அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அந்த பங்களாவை ஒரு மாதத்திற்குள் காலி செய்யுமாறு மக்களவை உறுப்பினர்களுக்கான குடியிருப்பு வசதிகுழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிரியா

இறையன்புவுக்கு புதிய பதவி: ஆளுநர் ஒப்புதல் அளிப்பதில் தாமதமா?

அதிமுக பொதுக்குழு வழக்கில் நாளை க்ளைமாக்ஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share