இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தில் பயணிக்க ’கட்டணம்’ அறிவிப்பு!

Published On:

| By christopher

India's longest sea bridge atal setu

மும்பையில் பிரதமர் மோடி இன்று (ஜனவரி 12) திறந்து வைத்த இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தை பயன்படுத்துவதற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. India’s longest sea bridge atal setu

இந்தியாவின் மிக நீளமான கடல் பாலமாக மும்பைக்கும் நவி மும்பைக்கும் இடையே 21.8 கிமீ நீளம் மற்றும் ஆறு வழிச்சாலையாக ரூ. 18,000 கோடி செலவில் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்துள்ளார். இந்த பாலத்திற்கு முன்னாள் பிரதமரும், மறைந்த பாஜக மூத்த தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் (அடல் சேது) பெயர் சூட்டப்பட்டுள்ளது.

20 நிமிடங்களில் கடக்க முடியும்!

இந்த பாலம் மும்பையில் உள்ள செவ்ரியில் இருந்து தொடங்கி நவி மும்பை ராய்காட் மாவட்டத்தில் உள்ள உரான் தாலுகாவில் உள்ள நவா ஷேவாவில் முடிவடைகிறது.

இந்த பாலத்தினால் மும்பைக்கும் நவி மும்பைக்கும் இடையிலான பயண நேரம் 2 மணி நேரத்தில் இருந்து வெறும் 20 நிமிடங்களாகக் குறைந்துள்ளது. தினமும் 70,000 வாகனங்கள் இந்த பாலத்தை பயன்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு கண்டுள்ளதோடு, இது நவி மும்பை மற்றும் அருகிலுள்ள பிற பகுதிகளில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பைக், டிராக்டர்கள் செல்ல அனுமதியில்லை! 

பாலத்தில் செல்வதற்கு பைக்குகள், ஆட்டோரிக்ஷாக்கள் மற்றும் டிராக்டர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் நான்கு சக்கர வாகனங்களுக்கு அதிகபட்ச வேக வரம்பு 100 கி.மீ என மும்பை காவல்துறை நிர்ணயித்துள்ளது.

கட்டணம் நிர்ணயம்!

மேலும் பாலத்தை பயன்படுத்தும் வாகனங்களுக்கு நாள் மற்றும் மாதக்கணக்கில் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறைந்த பட்சமாக காருக்கு ஒருமுறை பயன்பாட்டுக்கு ரூ. 250ம், மாத கட்டணமாக ரூ. 12,000ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கண்டெய்னர் உள்ளிட்ட கனரக வாகனங்களின் ஒருமுறை பயன்பாட்டுக்கு ரூ. 1,580ம், மாத கட்டணமாக ரூ.79,000 வரையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே வருமான வரி, வாகன வரி மற்றும் சாலை வரி கட்டிய பிறகும் இந்த புதிய பாலத்தில் பயணிக்க மாதம் 12,500 – 79,000 கட்டணம் செலுத்த வேண்டுமா என்று சமூகவலைதளங்களில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

அயலான் : ட்விட்டர் விமர்சனம்!

கேப்டன் மில்லர் : ட்விட்டர் விமர்சனம்!

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு: 3ஆவது முறையாக தள்ளுபடி!

எதற்கு இத்தனை வழக்கறிஞர்கள்?: பொன்முடி வழக்கில் நீதிபதி கேள்வி!

India’s longest sea bridge atal setu

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share