தமிழகத்தில் வேலை செய்யும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக வதந்தி பரவிய நிலையில் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்பியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் பீகாரிலிருந்து வந்த வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக இரண்டு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக இரு மாநில போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வீடியோ போலியானது என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகப் பரப்பப்படும் போலி காணொளிகள் தொடர்பாக பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அமன் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவரது கைப்பேசியிலிருந்து இது போன்ற பல காணொளிகள் கிடைத்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகப் பீகார் கூடுதல் டிஜிபி ஜிதேந்தர் சிங் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வதந்தி பரப்பியது தொடர்பாக நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வதந்தி பரப்பியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 10 பேர் கொண்ட போலீசார் குழு விசாரணை நடத்தி வருகிறது. ஒரு தற்கொலை வழக்கு கொலை வழக்கு போன்று தோற்றுவிக்கப்பட்டுள்ளது. ஒரு டிஎஸ்பி மற்றும் 4போலீசார் தமிழகத்திற்குச் சென்று விசாரணை நடத்த உள்ளனர் ” என்று தெரிவித்துள்ளார்.
பிரியா
தலைமைப் பொறுப்பிற்குத் தகுதியானவரா? எடப்பாடியை விமர்சித்த அமர் பிரசாத் ரெட்டி
கட்சிக்காக உழைத்தவர்களை வேவு பார்ப்பதா?: பாஜக ஐடி விங் செயலாளர் விலகல்!