டெல்லிக்கு வடக்கே சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவில் ஹரியானாவில் உள்ள கோரக்பூரில் வட இந்தியாவின் முதல் அணுமின் நிலையம் அமைக்கப்படுகிறது என்று மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று (பிப்ரவரி 18) தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை இன்று சந்தித்து மத்திய அணுசக்தித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பேசுகையில், ”முன்பு பெரும்பாலும் தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் அல்லது நாட்டின் மேற்குப் பகுதியான மகாராஷ்டிரா போன்ற இடங்களில் மட்டுமே அணுமின் நிலையங்கள் அமைக்கப்பட்டன.
இந்தியாவின் அணுசக்தித் திறனை அதிகரிப்பதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், கடந்த 8 ஆண்டுகளில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி 10 அணு உலைகளை நிறுவுவதற்கு ஒரே நேரத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அணு வித்யுத் பரியோஜனாவின் (GHAVP) இரண்டு அலகுகள் 700 மெகாவாட் திறன் கொண்டதாக முற்றிலும் உள்நாட்டு வடிவமைப்புடன் கூடிய அழுத்தப்பட்ட கனநீர் உலையுடன் (PHWR) ஹரியானாவில் ஃபதேஹாபாத் மாவட்டத்தில் உள்ள கோரக்பூர் கிராமத்திற்கு அருகில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு ஒதுக்கப்பட்ட மொத்த நிதியான ரூ. 20,594 கோடியில் இதுவரை ரூ. 4,906 கோடி செலவிடப்பட்டுள்ளது.
நாட்டின் எதிர்கால நம்பிக்கைக்குரிய துறையான இந்த அணுசக்தித் துறை, இந்தியாவின் ஆற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறன் கொண்டது. அணுசக்தி ஆலைகளைத் திறப்பதற்கான ஆதாரங்களுக்காக, பொதுத்துறை நிறுவனங்களுடன் கூட்டு முயற்சிகளை உருவாக்க அணுசக்தித் துறை அனுமதி அளித்துள்ளது.
ஹரியானா உலைக்கான முக்கிய கட்டடங்கள், கட்டமைப்புகள், பாதுகாப்பு தொடர்பான பம்ப் ஹவுஸ் (SRPH), எரிபொருள் எண்ணெய் சேமிப்பு பகுதி-1 மற்றும் 2 (FOSA-1&2), காற்றோட்ட அடுக்கு, மேல்நிலை தொட்டி (OHT) போன்றவற்றுக்கான பணிகளில் நல்ல முன்னேற்றம் உள்ளது.
டர்பைன் கட்டடம் -1 மற்றும் 2, 220 கிலோ வாட் சுவிட்ச்யார்ட் மற்றும் ஐடிசிடி-1ஏ ஆகியவற்றுக்கான அடிப்படைப் பணிகள் முடிவுற்றுள்ளன. மற்ற பகுதிகளில் ஐடிசிடி-கள், 400 கேவி சுவிட்ச்யார்டு உள்ளிட்டவற்றின் அடிப்படைப் பணிகள் நடந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
முதன்மைக் குளிரூட்டி பம்புகள், கேலண்ட்ரியா, அணு உலை ஹெடர்கள், மாடரேட்டர் மற்றும் பிற டி20 வெப்பப் பரிமாற்றிகள் போன்ற முக்கிய உற்பத்தி உபகரணங்களுக்கான கொள்முதல் ஆணைகள் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எண்ட் ஷீல்டுகள் மற்றும் முதல் யூனிட்டுக்கான அனைத்து நீராவி ஜெனரேட்டர்களும் வாங்கப்பட்டுள்ளது. மற்ற உபகரணங்களின் உற்பத்தி பல்வேறு நிலைகளில் உள்ளது. கட்டுமான தளத்துக்கு குறித்த நேரத்தில் அவை கொண்டு செல்லப்படும்” என ஜிதேந்திர சிங் கூறினார்.
கிறிஸ்டோபர் ஜெமா
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை வாசலில் வந்து வரவேற்ற சத்குரு
கர்நாடக வனத்துறை துப்பாக்கிச் சூடு : பிரேத பரிசோதனைக்கு உறவினர்கள் நிபந்தனை!