கர்நாடகாவில் குக்கே ஸ்ரீ சுப்பிரமணிய கோயில் வளாகத்தில் இந்துக்கள் அல்லாத பிற வியாபாரிகள் வணிகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்து ஜானகரன் வேதிகே என்ற வலதுசாரி அமைப்பானது, கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்தில் குக்கே ஸ்ரீ சுப்பிரமணிய கோயிலின் நுழைவு வாயிலில் இந்து அல்லாத வணிகர்கள், சம்ப சஷ்டி விழாவின் போது கோயில் வளாகத்தில் வணிகம் செய்ய தடைவிதித்து பேனர் வைத்துள்ளனர்.

குக்கே ஸ்ரீ சுப்பிரமணிய கோயில் சம்ப சஷ்டி மகோத்ஸவா நவம்பர் 21-ஆம் தேதி தொடங்கியது. இவ்விழா, டிசம்பர் 5-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நவம்பர் 29-ஆம் தேதி சம்பா சஷ்டி மகோத்சவம் நடைபெறுகிறது.
இந்தநிலையில், இந்து ஜானகரன் வேதிகே அமைப்பு குக்கே சுப்பிரமணிய கோயில் வளாகத்தில் வைத்துள்ள பேனரில், “சம்ப சஷ்டி விழாவின் போது கோயில் வளாகத்தில் பிற மதத்தினர் வணிக நடவடிக்கையில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்து ஜானகரன் வேதிகே அமைப்பின் நிர்வாகி ஹரிபிரசாத், குக்கே ஸ்ரீ சுப்பிரமணிய கோயில் நிர்வாகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில்,
“கர்நாடகா இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின்படி, விழாக்காலங்களில் மற்ற மதத்தினரை வணிகம் செய்ய அனுமதிக்கக்கூடாது.
அதன்படி, இந்து அல்லாத வணிகர்கள் சம்ப சஷ்டி விழாவின் போது வியாபாரம் செய்யவதை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கோயிலின் புனிதம் மற்றும் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த கடிதத்திற்கு பதிலளித்துள்ள சுப்பிரமணிய கோயில் நிர்வாகக் குழுவின் தலைவர் மோகன்ராம் சுள்ளி,
“கர்நாடகா இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின்படி கோயில் வளாகத்தில் பிற மதத்தை சேர்ந்தவர்களுக்கு சொத்துக்களை குத்தகைக்கு விடவோ, ஒப்பந்தம் செய்யவோ முடியாது.
இந்த விதிகளை நாங்கள் பின்பற்றி வருகிறோம். இந்து அல்லாத வணிகர்கள் கோயில் வளாகத்தில் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
நள்ளிரவில் களைகட்டிய பிரபாகரன் பிறந்தநாள் கொண்டாட்டம்!
மெரினா பீச்: மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நடைபாதை நாளை திறப்பு!