நடைபெறவுள்ள 5 நாள் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் கேள்வி நேரம், பூஜ்ஜிய நேரம் மற்றும் தனி நபர் தீர்மானங்கள் மீதான விவாதம் எதுவும் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற செப்டம்பர் மாதம் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாஷ் ஜோஷி தெரிவித்து இருந்தார்.
மேலும் இந்த கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால் வழக்கமான மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக நடத்தப்படும் இந்த சிறப்பு கூட்டத்தொடரே நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக நடைபெறும் கடைசி கூட்டத்தொடராக இருக்கும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், நடைபெறவுள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் கேள்வி நேரம், பூஜ்ஜிய நேரம் மற்றும் தனி நபர் தீர்மானங்கள் மீதான விவாதம் எதுவும் நடைபெறாது என்று மக்களவை மற்றும் மாநிலங்களவை செயலகங்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
இனப்படுகொலைக்கு அழைப்பா?: உதயநிதி பதிலடி!
இன்பநிதி பாசறை: திமுக நிர்வாகிகள் சஸ்பெண்ட்!