‘சீனா-தைவான் மீண்டும் சேர்வதை யாராலும் தடுக்க முடியாது’ – புத்தாண்டு உரையில் ஜின்பிங் அறைகூவல்!

Published On:

| By Kumaresan M

தைவான் தங்களுடன் ஒன்றிணைவதை யாராலும் தடுக்க முடியாது என்று சீன அதிபர் ஸீ ஜின்பிங் தன் புத்தாண்டு உரையில் அறைகூவல் விடுத்துள்ளார்.

தைவான் நாட்டை சீனா உரிமை கொண்டாடி வருகிறது. தைவான் அதற்கு அடி பணிய மறுக்கிறது. இந்த நிலையில், புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சீன அதிப ஸீ ஜின்பிங், அரசுக்கு சொந்தமான சி.வி.டி.வியில் நாட்டு மக்களிடத்தில் இன்று (ஜனவரி 1) உரையாற்றினார்.

அப்போது, அவர் பேசியதாவது, ‘தைவானுக்குள்ளும் வெளியேயும் சுதந்திரத்துக்கு ஆதரவாக செயல்படும் சக்திகளுக்கு தெளிவான எச்சரிக்கையை விடுக்கிறேன். தைவான், சீனா நாட்டிலுள்ள மக்கள் ஒரே குடும்பம். எங்கள் குடும்ப பிணைப்புகளை யாராலும் துண்டிக்க முடியாது. தேசிய ஒற்றுமையின் வரலாற்றை யாராலும் சிதைக்க முடியாது’ என்று பேசியுள்ளார்.

மேலும், ”சீனாவுடன் தைவான் மீண்டும் இணைவது தவிர்க்க முடியாதது. இரு தரப்பு மக்களும் இணைந்து சீனாவின் மகிமையில் பெருமை கொள்ள வேண்டும்’ என கூறினார்.

சீனாவால் பிரிவினைவாதியாக அடையாளம் குத்தப்பட்ட லாய் சிங் தே கடந்த மே மாதம் தைவான் நாட்டின் அதிபராக பதவியேற்றார். அதற்கு பிறகு, பதற்றம் வழக்கத்தைவிட அதிகமாகியுள்ளது. தைவான் கடற் பகுதிக்கு போர்க்கப்பல்களையும் வான் வெளியில் விமானப்படை விமானங்களை அடிக்கடி அனுப்பி சீனா மிரட்டலில் ஈடுபடுவது அதிகரித்து கொண்டே உள்ளது. தைவானை தன் கட்டுக்குள் கொண்டு வரவும் பிரிவினைவாதிகளை அச்சுறுத்தவும் அடிக்கடி தைவானை சுற்றி போர்ப்பயிற்சிகளையும் சீனா நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

ரூ.390 சேலை 1600க்கு விற்று மோசடி : திவ்யா உண்ணி நிகழ்ச்சியால் கல்யாண் சில்க்ஸ் அலறல்!

ஆங்கில புத்தாண்டு : தலைவர்கள் வாழ்த்து!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share