செயல்படாத வங்கிக்கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லையென அபராதம் எதுவும் விதிக்கக்கூடாது என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி தொடர்ந்து பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் புதிய அறிவிப்புகள் என்னவென இங்கே பார்க்கலாம்.
*எந்தவொரு செயல்படாத கணக்கையும் மீண்டும் செயல்படுத்துவதற்கு, வங்கிகள் எந்த கட்டணத்தையும் வசூலிக்க கூடாது.
*செயல்படாத கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லை எனக்கூறி, வங்கிகள் அபராதம் விதிக்க முடியாது.
*ஒரு வங்கிக்கணக்கு செயலிழந்தால், குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காததற்காக வங்கிகள் அபராதம் விதிக்க முடியாது.
*ஒரு வங்கிக்கணக்கு செயல்படாமல் இருந்தால் எஸ்எம்எஸ், ஈமெயில், கடிதம் மூலம் வங்கிகள் வாடிக்கையாளருக்கு அதை தெரியப்படுத்த வேண்டும். வாடிக்கையாளரை தொடர்பு கொள்ள முடியாத பட்சத்தில் அவரை அறிமுகம் செய்த நபர் அல்லது கணக்கு வைத்திருப்பவரின் நியமனதாரரை (Nominee) தொடர்பு கொள்ள வங்கிகள் முயற்சி செய்ய வேண்டும்.
*இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சேமிப்பு/நடப்பு கணக்கு செயல்படாமல் இருந்தால், அந்த கணக்கு செயல்படாத கணக்காக கருதப்படும்.
*சேமிப்புக் கணக்கு செயல்படாமல் இருந்தாலும், வங்கிகள் வட்டியை தொடர்ந்து செலுத்த வேண்டும்.
*ஒரு வருடமாக எந்தவொரு பரிவர்த்தனையும் நடைபெறாத வங்கிக்கணக்குகளை கண்டறிய, ஆண்டுதோறும் வங்கிகள் ஆய்வு நடத்த வேண்டும்.
*பத்து ஆண்டுகளாக செயல்படாத டெபாசிட் கணக்குகளில் உள்ள இருப்புத்தொகை, ரிசர்வ் வங்கியால் பராமரிக்கப்படும் டெபாசிட்டர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதி திட்டத்திற்கு வங்கிகளால் மாற்றப்படும்.
ரிசர்வ் வங்கியின் இந்த திருத்தப்பட்ட நடைமுறைகள் அனைத்தும் வருகின்ற ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
கிராமப்புற, கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் இந்த புதிய நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
கடந்த 2023 மார்ச் மாதத்தின்படி வங்கிகளில் உள்ள, உரிமை கோரப்படாத இருப்புத் தொகையின் எண்ணிக்கை ரூபாய் 42,272 கோடியாக உள்ளது. இது 2022-ம் ஆண்டை விட சுமார் 28% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பொங்கல் பரிசுத் தொகை அறிவிப்பு: எவ்வளவு தெரியுமா?
திட்டமிட்டபடி வேலை நிறுத்தம்: போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!