ரூ.7 லட்சம் வரை வருமான வரி கிடையாது: நிர்மலா சீதாராமன்

இந்தியா

2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வரும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வரி கிடையாது என்று அறிவித்துள்ளார்.

பிரதமர் மோடி அரசின் கடைசி முழு பட்ஜெட் இதுவாகும். இதனால் மக்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பு எழுந்திருக்கும் நிலையில் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

அதில், ”50 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும். மூன்றாம் கட்ட மின்னணு நீதிமன்றங்கள் அமைக்க ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஜவுளி மற்றும் வேளாண் பொருட்களைத் தவிர இதர பொருட்களுக்கான அடிப்படை இறக்குமதி வரி 21 சதவிகிதத்திலிருந்து 13 சதவிகிதமாகக் குறைப்பு உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

வருமான வரி தொடர்பான அறிவிப்பில், ஆண்டுக்கு 7 லட்சம் ரூபாய் வரை தனிநபர் வருமானம் பெறுவருக்கு வருமான வரி கிடையாது. ரூ.7 லட்சம் முதல் ரூ. 9 லட்சம் வரை வாங்குபவர்களுக்கு 5 சதவிகித வரி விதிக்கப்படும்.

ஆண்டுக்கு ரூ.12 முதல் ரூ.15 லட்சம் வரை வருமானம் வாங்குபவர்களுக்கு 15சதவிகித வரி விதிக்கப்படும். 15 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் வாங்குபவர்களுக்கு 30சதவிகித வரி விதிக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பிரியா

நல்லாட்சிக்கான திறவுகோல்!

குடியரசுத் தலைவர் உரை : பாஜக அரசின் தேர்தல் பரப்புரை – விசிக!

ஆர்.என்.ரவி ‘அவுட்’… தமிழிசை ‘இன்’-திடீர் திருப்பம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.