பாதுகாப்பு காரணங்களுக்காக விமான நிலையங்களுக்கு அருகே 5ஜி சிக்னல் கோபுரங்கள் அமைக்கக்கூடாது என்று தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்தகட்டமாக 5ஜி சேவையானது இந்தியாவில் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் அக்டோபர் 1ம் தேதி முதல் அறிமுகம் செய்யப்பட்டது.
அடுத்த 2 ஆண்டுகளில் படிப்படியாக நாடு முழுவதும் இதனை விரிவுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் விமான நிலையங்களுக்கு அருகே 5ஜி சேவை வழங்கக் கூடிய கோபுரங்கள் இருக்கக் கூடாது என தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய தொலை தொடர்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தொலைத்தொடர்பு அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில்,
”இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் ஓடுபாதையில் இருந்து 2.1 கிமீ தொலைவில் 3,300 – 3,670 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையில் 5ஜி சிக்னல் கோபுரங்களை நிறுவ வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும் ஓடுபாதையின் இரு முனைகளில் இருந்து 2,100 மீட்டர் மற்றும் இந்திய விமான நிலையங்களின் ஓடுபாதையின் மையக் கோட்டிலிருந்து 910 மீட்டர் தொலைவிற்கு அப்பால் மட்டுமே கோபுரங்களை அமைக்கலாம்.
விமான போக்குவரத்துக்கான மின்னணு கருவிகள் பாதிக்கப்படும் என்பதால் விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 5ஜி கோபுரங்களை நிறுவும்போது மத்திய அரசின் விதிமுறைகளை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டர் : யார் இந்த வாஷிங்டன் சுந்தர்?
உலக எய்ட்ஸ் தினம்: பாதிப்பும் விழிப்புணர்வும்!