ராமர் கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு தனக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் கட்டப்பட்டு வரும் அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு நாளை (ஜனவரி 22) வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்குமாறு நாடு முழுவதும் உள்ள முக்கிய அரசியல்வாதிகள், முன்னணி தொழிலதிபர்கள், திரைப்பட நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களுக்கு ராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா சார்பில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் அழைப்பிதழ் வழங்கினர்.
அதன்படி ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், தனுஷ், அல்லு அர்ஜூன், அனுபம் கெர் உள்ளிட்ட பல பிரபலங்கள் குடமுழுக்கு விழாவில் நேரில் சென்று பங்கேற்க உள்ளனர்.
இந்த நிலையில், கர்நாடகா பிடதியில் ஆசிரமம் நடத்தி, பாலியல் வழக்குகளில் சிக்கி இருக்கும் சாமியார் நித்தியானந்தாவும் அயோத்தி கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டிற்குத் தப்பி கைலாசா என்ற நாட்டில் இருப்பதாக கூறி வரும் நித்தியானந்தா, தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில், “அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது. இந்த வரலாற்று நிகழ்வைத் தவறவிடாதீர்கள்! பாரம்பரிய பிரதிஷ்டையின் போது ராமர் கோவிலின் பிரதான தெய்வமாக முறைப்படி அழைக்கப்பட்டு, அலங்கரிக்க உள்ளார்.
இந்த மாபெரும் நிகழ்வுக்கு நித்தியானந்தா முறைப்படி அழைக்கப்பட்டதை அடுத்து அவர் கலந்து கொள்ள உள்ளார்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு பதிவில், “கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த ஆர்எஸ்எஸ் பிரதிநிதி ஒருவர் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கைலாசா அமெரிக்காவிற்குச் சென்று அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கான அதிகாரப்பூர்வ அழைப்பை வழங்கினார்.
எங்களது கோவிலுக்கு வருகை தந்து இந்த அழைப்பை வழங்கியதற்கு ஆர்எஸ்எஸ்க்கு கைலாச சார்பில் நன்றி. ராம ஜென்மபூமி திறப்பு விழாவில் கலந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
மேடையில் ஸ்டாலினுக்கு உதயநிதி வைத்த டிமாண்ட்!
ராமர் கோயில் திறப்பு: தீபம் ஏற்ற ஆளுநர் அழைப்பு!
“ராமர் கோயில் – கேள்வி கேட்டால் ICE வைப்பார்கள்” : இளைஞரணி மாநாட்டில் கனிமொழி