27வது மாடியில் வசிப்பது ஏன்? – ரகசியத்தை வெளியிட்ட நீடா அம்பானி

Published On:

| By Kumaresan M

மும்பையில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் அண்டாலியா வீடு கிட்டத்தட்ட 15 ஆயிரம் கோடி மதிப்பு கொண்டது. 27 மாடிகள் உள்ளன. மாடியில் 3 ஹெலிகாப்டர் தளங்களும் அமைந்துள்ளன.இந்த வீட்டில் 600 பேர் வேலை பார்க்கின்றனர். இங்குதான் முகேஷ், நீடா , மூத்த மகன் ஆகாஷ், இளையமகன் ஆனந்த் மற்றும் மருமகள்ககள், பேரன் பேத்திகள் வசிக்கின்றனர். குறிப்பாக அண்டாலியா வீட்டின் 27வது மாடியில் மட்டுமே முகேஷின் குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

மற்ற இடங்களில் பணியாளர்கள், அலுவலர்கள், பாதுகாவலர்கள் தங்குவார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த முடிவை நீடா அம்பானியே எடுத்துள்ளார். 27வது மாடியில் இயற்கையான காற்று வீட்டுக்குள் புகும்படி கட்டுமானம் அமைக்கப்பட்டுள்ளதாம். நீடாவின் அறிவுரையின் படி இந்த 27வது மாடி கட்டப்பட்டுள்ளது. இதனால், இங்கு மட்டுமே அம்பானி குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த பகுதிக்கு நெருங்கிய உறவினர்களை தவிர வேறு யாரும் செல்ல முடியாது.

சுமார் 40 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள அன்டாலியா வீட்டை சிகாகோவை சேர்ந்த பெர்கின்ஸ் அண்டு பில் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த ஹிச்ர் பென்டர் அசோசியேட்ஸ் நிறுவனம் இணைந்து கட்டியுள்ளனர். 173 மீட்டர் உயரத்தில் இந்த கட்டடம் கட்டப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு கட்டுமானம் தொடங்கி இரு ஆண்டுகளில் இந்த கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. 9 மெகா லிப்டுகள் இந்த வீட்டுக்குள் இருக்கின்றன.

அண்டார்டிக் கடற்பகுதியிலுள்ள அண்டாலியா என்ற தீவின் பெயரையே இந்த வீட்டுக்கு அம்பானி சூட்டியுள்ளார். உலகின் காஸ்ட்டிலியான வீடு இதுதான். 8.0 என்ற ரிக்டர் அளவில் பூகம்பம் தாக்கினாலும் இந்த வீடு அசைந்து கொடுக்காது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

-எம்.குமரேசன்

பயிற்சினு அனுப்புனாங்க; போருக்கு போறேனு தெரியல!- உக்ரைனிடம் சிக்கிய வடகொரிய வீரர் புலம்பல்!

வெறிச்சோடிய சென்னை… சொந்த ஊருக்கு செல்ல கைகொடுக்கும் அரசு பேருந்துகள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel