நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) மக்களவையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இதில் இளைஞர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் குறித்து நிர்மலா சீதாராமன் பேசும்போது,
“ஸ்கில் இந்தியா மிஷன் திட்டத்தின் மூலம் 1.4 கோடி இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 3,000 புதிய ஐடிஐகள் நிறுவப்பட்டுள்ளது.
7 ஐஐடிகள், 16 ஐஐஐடிகள், 7 ஐஐஎம்கள், 15 எய்ம்ஸ் மற்றும் 390 பல்கலைக்கழகங்கள் என ஏராளமான உயர்கல்வி கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பிஎம் முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் 43 கோடி இளைஞர்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.
ஃபண்ட் ஆஃப் ஃபண்ட், ஸ்டார்ட்அப் இந்தியா மற்றும் ஸ்டார்ட்அப் கிரெடிட் கேரண்டி போன்ற திட்டங்கள் நமது இளைஞர்களுக்கு உதவுகின்றன” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி வீடுகள்!
இடைக்கால பட்ஜெட்: வேளாண் துறைக்கான முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?