மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) மக்களவையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில் மருத்துவம், ரயில்வே, விவசாயம், மெட்ரோ, சுற்றுச்சூழல், இளைஞர்கள் நலன் என பல்வேறு துறைகள் சார்ந்த முக்கிய அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
இடைக்கால பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்:
விரைவில் கூடுதல் மருத்துவக் கல்லுாரிகள் அமைக்கப்படும்.
ஆஷா மருத்துவ உதவியாளர்கள் ஆயுஷ்மான் திட்டத்தின்கீழ் கொண்டு வரப்படவுள்ளனர்.
கருப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசிக்கு ஊக்கமளித்தல்.
இளைஞர்கள் மருத்துவர்கள் ஆக பல அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்.
தற்போதுள்ள மருத்துவமனை உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். இதற்கான ஆய்வு செய்ய உயர்மட்ட குழு அமைக்கப்படும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது ஊட்டச்சத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக யூ வின் என்ற செயலி செயல்படுத்தப்படும்,
அங்கன் வாடி பணியாளர்களுக்கு ஆயுஷ்மான் திட்டப் பலன்கள் வழங்கப்படும்.
ஐந்து ஒருங்கிணைந்த கடல் உயிரின பூங்காக்கள் அமைக்கப்படும்.
பெண்களை லட்சாதிபதியாக்கும் திட்டத்தின் உத்வேகம் பிறதுறை சார் பெண்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
புதிய ரயில் வழித்தடங்கள் அமைப்பதற்கான புதிய இயக்கம்.
ரயில் போக்குவரத்து அதிகம் நிறைந்த வழித்தடங்கள் அமைக்கப்படும். இதன்காரணமாக, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும்.
வந்தேபாரத் ரயில்களை அதிக எண்ணிக்கையில் இயக்க முடிவு.
விமான நிலைய விரிவாக்கப் பணிகள் தொடரும்.
மெட்ரோ ரயில் திட்டங்கள், நமோ பாரத் ரயில் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பதோடு தொடர்ந்து பல்வேறு நகரங்களுக்கு இவை விரிவுபடுத்தப்படும். பெருநகரங்களில் மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கம் தொடரும்.
வந்தே பாரத் ரயில்களுக்காக 40,000 ரயில்பெட்டிகள் உற்பத்தி செய்யப்படும்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார வாகன கட்டமைப்பை உருவாக்க முடிவு. ஜி20 உச்சிமாநாடு சுற்றுலாத்துறையை வலுப்படுத்தியுள்ளது.
உள்நாட்டு சுற்றுலாவில் கவனம் செலுத்தப்படும். இது சுற்றுலா சார்ந்த வர்த்தகர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக இருக்கும்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கூட்டணி யாரோடு..? பாமக பொதுக் குழுவில் அரசியல் தீர்மானம்!
பட்ஜெட்: ஸ்கில் இந்தியா திட்டத்தின் கீழ் 1.4 கோடி இளைஞர்களுக்குப் பயிற்சி!