சரிவில் இருந்து மீண்ட பங்குச்சந்தை: இந்த பங்குகளுக்கு செம்ம டிமாண்ட்!

Published On:

| By Selvam

ஜூலை 10 புதன்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 916 புள்ளிகள் சரிந்து வர்த்தக முடிவில் 427 புள்ளிகள் குறைந்து 79,925, புள்ளியிலும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி இன்ட்ரா டே வர்த்தகத்தில் 24,141 புள்ளிகள் வரை சரிவை கண்டு வர்த்தக முடிவில் 109 புள்ளிகள் குறைந்து 24,324 புள்ளியில் முடிவடைந்தது.

புதன்கிழமை வர்த்தகத்தில் மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவன பங்கு , 6.6 சதவீதம் சரிந்தது. அதைத் தொடர்ந்து டாடா ஸ்டீல், டிசிஎஸ், எஸ்பிஐ, ஹெச்சிஎல் டெக், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், இன்ஃபோசிஸ், கோடக் வங்கி, ஐடிசி மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.

புதன்கிழமை இன்ட்ராடே வர்த்தகத்தில் ஏசியன் பெயிண்ட்ஸ் பங்கு 5.09 சதவீதம் உயர்ந்து பிஎஸ்இயில் ஒரு பங்கின் விலை 2,979 ஆக உயர்ந்தது. பெயிண்ட்ஸ் நிறுவன பங்கு 3 சதவீதம் வரை உயர்ந்து லாபத்தை கொடுத்தது. பவர் கிரிட், ஹெச்யுஎல், என்டிபிசி, அதானி போர்ட்ஸ் மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் பங்குச் சந்தை சரிவை கட்டுப்படுத்த உதவியது.

முதலீட்டாளர்கள் நிஃப்டி FMCG, பார்மா மற்றும் ஹெல்த்கேர் மீது தங்கள் கவனத்தை செலுத்த தொடங்கியதால் நிஃப்டி ஆட்டோமொபைல், மெட்டல் மற்றும் பொதுத்துறை வங்கி குறியீடுகளை சரிவை சந்தித்தன.

புதன்கிழமை இன்ட்ரா டே வர்த்தகத்தில் டிவிஎஸ் மோட்டாரின் பங்கு 1.54 சதவீதம் உயர்ந்து ஒரு பங்கின் விலை 2,476 ஆக உயர்ந்தன. முன்னதாக டிவிஎஸ் நிறுவனம் 2024 ஆண்டுக்கான Apache RTR 160-பந்தய இரு சக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

பாரத ஸ்டேட் வங்கி 15 ஆண்டு கால Infrastructure பத்திரங்கள் மூலம் 7.36 சதவீத வட்டியில் 10,000 கோடி திரட்டியுள்ளதாக வங்கி புதன்கிழமை தெரிவித்துள்ளது.

நீண்டகால பத்திரங்கள் இது 6 வது முறையாக மூலதன நிதியை திரட்ட உள்ளதாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா இதுவரையில் நீண்டகால பத்திரங்கள் மூலமாக சுமார் 59,718 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்கள் மூலமான நிதியை திரட்டி உள்ளது.

பேங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி மற்றும் பாங்க் ஆஃப் இந்தியா ஆகியவை இன்ஃப்ரா பத்திரங்கள் மூலம் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளன.

இந்தியாவில் உள்ள ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் புதிய வணிக பிரீமியத்தில் (New Business Premium) 22.9 சதவீதம் அதிகரித்து 89,726.7 கோடியை ஈட்டியதாகவும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஈட்டிய 73,004.87 கோடி ரூபாயுடன் ஒப்பிடும் போது, 22.9 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நேற்று புதன்கிழமை இன்ட்ரா டே வர்த்தகத்தில் Life Insurance Corporation of India (LIC), ICICI Prudential Life Insurance Company (ICICI Pru), Max Financial Services, SBI Life Insurance Company and HDFC Life Insurance Company நிறுவன பங்குகள் மும்பை பங்குச் சந்தை BSEல் 2 முதல் 4% வரை உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு லாபத்தை அள்ளிக் கொடுத்தன. மேலும் ஐசிஐசிஐ ப்ரூடென்சியல் ஆயுள் காப்பீட்டு நிறுவன பங்கு புதிய 52 வார உச்சத்தை அடைந்து
673.60ஐ எட்டியது.

ஆயுள் காப்பீட்டுத் துறையானது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் 18.9 சதவிகிதம் வளர்ச்சிப் பாதையைத் தக்கவைத்துக் கொண்டதுடன், தனியார் துறை காப்பீட்டு நிறுவனங்கள் 22.1 சதவிகிதம் ஆண்டு வளர்ச்சியை அடைந்துள்ளதாக அறிக்கை ஒன்று கூறுகிறது. இதே காலகட்டத்தில் பொதுத்துறை நிறுவனமான LIC 12.7% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

HCL டெக் நிறுவனம் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 6-7 சதவீதம் வருவாய் அதிகரித்து 27,900 கோடி முதல் ரூ.28,034 கோடி வரை அறிவிக்க வாய்ப்புள்ளதாக பங்குச் சந்தை வட்டாரத்தில் தகவல்கள் பரவி வருகிறது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவுகளை ஜூலை 11 வியாழன் அன்று அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஜூலை 11 வியாழக்கிழமை காலை முதல் அமர்வில் நிஃப்டி , சென்செக்ஸ் உயர்வுடன் திறக்கப்பட்டது, சென்செக்ஸ் 185.32 புள்ளிகள் உயர்ந்து 80,110.09 ஆக புள்ளியிலும் , தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 47.35 புள்ளிகள் உயர்ந்து 24,371.80 புள்ளியிலும் வர்த்தகம் தொடங்கியது. காலை முதல் அமர்வில் யெஸ் வங்கி 5% லாபம் ஈட்டியது : டாடா ஸ்டீல், டிசிஎஸ், ஐசிஐசிஐ வங்கி ஆகியவை அதிக லாபம் ஈட்டின. HDFC Bank and M&M நிறுவன பங்குகள் விலை சரிவை சந்தித்து வருகிறது.

TCS நிறுவனம் முதல் காலாண்டு முடிவுகளை இன்று அறிவிக்க உள்ளதால் முதலீட்டாளர்கள் மத்தியில் இதன் பங்கு கவனம் செலுத்துகிறது. இந்நிலையில் காலை முதல் அமர்வில் இதன் பங்கு 1.65% உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.

Glenmark Life, Kesoram Industries, Tata Elxsi, JTL Industries, Sula Vineyards, Power Grid, SBI,Zydus Life,Nykaa நிறுவன பங்குகள் வியாழக்கிழமை வர்த்தகத்தில் கவனம் செலுத்தப்படும் என்று பங்குச்சந்தை தரகர்கள் கணிக்கின்றனர்.

– மணியன் கலியமூர்த்தி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இந்தியன் 2 வெளியாவதில் சிக்கல்?

எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆதரவாளர் வீட்டில் சிபிசிஐடி ரெய்டு!