நாட்டின் பல மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் இன்று (அக்டோபர் 18) அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவிலும் வெளிநாட்டிலும் இருந்து செயல்பட்டு வரும் பயங்கரவாதிகள், போதைப்பொருள் கடத்தல் கும்பல் இடையே அதிகரித்து வரும் தொடர்பை தகர்க்க இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், டெல்லி ஆகிய மாநிலங்களின் பல இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் முக்கிய தகவல்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோல், தீவிரவாதத் தொடர்பு மற்றும் தீவிரவாத குழுக்களுக்கு நிதியுதவி அளித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத்துறையினர் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி நாடு முழுவதும் தமிழகம் உள்பட 13 மாநிலங்களில் சோதனை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில், 100க்கும் மேற்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைவர்கள் கைது செய்யப்பட்டதுடன், அந்த அமைப்புக்கும் தடைவிதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜெ.பிரகாஷ்
மும்பை இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர் வாபஸ் பெற்றது ஏன்?
இலங்கை எழுத்தாளருக்கு புக்கர் பரிசு!