பாட்னாவை தொடர்ந்து அடுத்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் பெங்களூருவில் நடைபெறும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் இன்று (ஜூன் 29) அறிவித்துள்ளார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வருகின்றன. கடந்த ஜூன் 23 ஆம் தேதி பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது.
இதில் 17 எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டன. தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் இமாச்சல பிரதேச தலைநகர் சிம்லாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் வடகிழக்கு மாநிலங்களில் தற்போது கனமழை பெய்து வருவதால் அடுத்த கூட்டத்தை பெங்களூருவில் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
அதன்படி அடுத்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் பெங்களூருவில் நடைபெறும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் இன்று அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில், “பாட்னா கூட்டத்தில், காங்கிரஸ் உள்ளிட்ட 17 கட்சிகள் 2024 மக்களவை தேர்தலில் மத்தியில் பாஜகவை தோற்கடிக்க ஒற்றுமையாகப் போராடவும், கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு ஒருங்கிணைந்து செயல்படவும் தீர்மானித்துள்ளன.
தொடர்ந்து 2வது கூட்டத்திற்கான இடமாக சிம்லாவை தேர்ந்தெடுத்தோம். ஆனால் பாட்னாவுக்குப் பிறகு, எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் பெங்களூருவில் ஜூலை 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறும்” என்று சரத் பவார் தெரிவித்துள்ளார்.
மோனிஷா
மணிப்பூரில் தடுத்து நிறுத்தப்பட்ட ராகுல்: தலைவர்கள் கண்டனம்!
‘இனி வாய்ப்பில்ல ராஜா’ : மாமன்னன் பார்த்தபின் உதயநிதி முடிவு!