நியூசிலாந்தின் மவோரி பழங்குடிகளுக்கும் பிரிட்டன் அரசுக்கும் இடையேயான பாரம்பரிய ஒப்பந்தத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பழங்குடியின பெண் எம்.பி. ஹானா தலைமையில் மவோரி எம்.பி.க்கள் பாரம்பரிய பாடல், நடனம் மூலம் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடந்த 1840-ல் பிரிட்டன் அரசு பிரதிநிதிகளுக்கும், நியூசிலாந்தின் வடக்குத் தீவில் இருக்கும் பூர்வக்குடிகளாக அறியப்படும் மாவோரி தலைவர்களுக்கும் இடையே ‘வைதாங்கி ஒப்பந்தம்’ மேற்கொள்ளப்பட்டது. இதில் மாவோரி பூர்வக்குடிகளுக்கு சில சலுகைகளும், உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தத்தில் மாற்றம் செய்ய நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் அண்மையில் ஒரு மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த மசோதாவுக்கு மவோரி கட்சி எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முதலில் இளம் எம்.பி. ஹானா பழங்குடி பாடலுடன் மசோதா நகலை கிழித்தெறிந்து அவையின் நடுவே வந்து போராட அவருடன் பிற மவோரி எம்.பி.க்களும் இணைந்து கொண்டனர்.
அவர்களின் பழங்குடியினப் பாடலும், அதற்கேற்ற ஆவேச நடனமும் நியூசிலாந்து நாடாளுமன்றத்தை அலற வைத்தது. அவர்களின் உரிமைப் பாடலை பார்த்த சபாநாயகர் பின்னர் மவோரி எம்.பி.க்கள் அனைவரையும் அவையிலிருந்து வெளியேற்ற உத்தரவிட்டார்.
ஹானா ரவ்ஹிடி மைபி க்ளார்க் 21 வயதேயானவர். இவர் நியூசிலாந்து வரலாற்றில் மிக இளம் வயதில் எம்.பி. ஆனவர் என்ற பெருமையை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
கங்குவா இருக்கட்டும்… ரஜினி நடித்த ‘கங்வா’ படம் தெரியுமா?
அரியலூரில் கள ஆய்வு : புதிய சிப்காட் தொழிற்பேட்டைக்கு ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!