பசிபிக் பெருங்கடலில் உள்ள கிறிஸ்துமஸ் தீவில் உலகிலேயே முதன் முதலாக புத்தாண்டு பிறந்துள்ளது.
2023 ஆம் ஆண்டின் கடைசி நாளான இன்று (டிசம்பர் 31) அனைவரும் புத்தாண்டை வரவேற்பதற்காக காத்திருக்கின்றனர். பட்டாசுகள் மற்றும் இனிப்புகளோடு மணி 12 ஆனதும் புத்தாண்டை கொண்டாடுவதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள்.
இந்தியாவில் புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில், உலகிலேயே முதன் முதலாக பசிபிக் பெருங்கடலில் உள்ள கிறிஸ்துமஸ் தீவில் 2024 ஆம் ஆண்டு புத்தாண்டு பிறந்துள்ளது.
இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு கிறிஸ்துமஸ் தீவில் புத்தாண்டு பிறந்துள்ளது. கிறிஸ்துமஸ் தீவில் உள்ள மக்கள் பட்டாசுகள், வான வேடிக்கைகளுடன் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.
தொடர்ந்து நியூசிலாந்து, கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் புத்தாண்டு பிறக்க உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
புத்தாண்டு கொண்டாட்டம்: பாமக தொண்டர்களுக்கு ராமதாஸ் அறிவுறுத்தல்!
‘முன்பதிவு செய்தவர்கள் கவனத்திற்கு’: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அறிவிப்பு பலகை!