புதிதாக 2 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.
இந்தியா முழுவதும் 8 அதிவேக வந்தே பாரத் ரயில்கள் ஓடுகின்றன. இதில் முதல் ரெயில் சேவை தலைநகர் டெல்லி- வாரணாசி இடையே கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது.
இந்நிலையில் புதிதாக 2 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி மும்பையில் இன்று (பிப்ரவரி 10 ) நடைபெற்ற விழாவில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த ரெயில்கள் மராட்டிய மாநிலத்துக்குள்ளே இயக்கப்படுகிறது. அதாவது மாநில தலைநகர் மும்பையில் இருந்து புனித ஸ்தலமாக கருதப்படும் ஷீரடிக்கும் (339 கி.மீ), மும்பையில் இருந்து சோலாப்பூருக்கும் (452 கி.மீ.) இயக்கப்பட உள்ளது.
இதன்மூலம் மகாராஷ்டிராவில் இருந்து இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. புதிய இந்தியாவுக்கான சிறந்த போக்குவரத்து உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான பிரதமர் மோடியின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு இது ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்று ரெயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.
மும்பை-சாய்நாதர் ஷிர்டி வந்தே பாரத் ரயில், நாட்டின் 10-வது வந்தே பாரத் ரயிலாகும். இது மகாராஷ்ட்ராவில், நாசிக், திரிம்பகேஸ்வர், சாய்நகர், ஷனி சிங்கனாப்பூர் ஆகிய முக்கிய யாத்திரை மையங்களின் போக்குவரத்தை இணைக்கும்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
”சாதனை மேல் சாதனை” அசத்திய ரொனால்டோ: உச்சிமுகர்ந்த அல் நாசர் அணி!
இடைத்தேர்தல் வேட்பாளர்கள் எண்ணிக்கை : தேர்தல் ஆணையம் அறிவிப்பு!