இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) இன்று (பிப்ரவரி 17) முதல் நாடு முழுவதும் உள்ள டோல்கேட்டில் பதிய பாஸ்டேக் விதிமுறைகளை அறிமுகப்படுத்தி உள்ளது. New Fastag rules implemented from today
இந்த புதிய கட்டமைப்பின் கீழ் ஒரு வாகனம் டோல் பிளாசாவிற்குள் நுழையும் போது அதன் பாஸ்டேக் கணக்கில் போதுமான தொகை இல்லை என்றால், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தவிர்ப்பதற்காக ஓட்டுநருக்கு தனது கணக்கை ரீசார்ஜ் செய்ய 60 நிமிடங்கள் வரை அவகாசம் வழங்கப்படும்.
பல வாகனங்கள் தங்கள் பாஸ்டேக் கணக்குகளில் குறைந்த பணம் வைத்திருப்பதன் காரணமாக டோல் கேட்டில் நீண்ட நேரம் நிற்க நேரிடுகிறது. இதனால், பின்னால் வரும் வாகனங்களும் சிரமத்துக்குள்ளாகின்றன.
புதிய விதிகளின்படி வாகனங்களுக்கு ஒரு மணி நேரம் அவகாசம் கொடுக்கப்படுகிறது. அதற்குள் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் சுங்க கட்டணத்தை இரட்டிப்பாக செலுத்த வேண்டும். பல பயனர்கள் தங்கள் பாஸ்டேக் கணக்குகளில் போதுமான பேலன்ஸ் வைத்து கொள்வதில் அலட்சியமாக உள்ளனர். இது தேவையற்ற தாமதங்கள் மற்றும் நெரிசலுக்கு வழிவகுக்கிறது. 60 நிமிட ரீச்சார்ஜிங் விதியின் மூலம் இந்த பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்று கூறப்படுகிறது.
புதிய விதிகளின்படி, போதிய பேலன்ஸ் இல்லையென்றால் பாஸ்டேக் முடக்கப்படும். பாஸ்டேக்கில் குறைந்த நிதியிருந்தால் அனைத்து சுங்கசாவடியிலும் ரீசார்ஜ் செய்ய முடியாது.
குறைந்த பேலன்ஸ், கே.ஒய்.சி பிரச்னை இருந்தால் சுங்கசாவடி செல்வதற்கு முன்னரே சரி செய்து விடுங்கள். விதிமுறைகளை மீறினால், இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படும். பிளாக் லிஸ்டில் இருக்கும் பாஸ்டேக்கில் இருந்து எதுவும் செய்ய கூடாது. ஸ்கேன் செய்த 10 நிமிடங்களில் பாஸ்டேக் பிளாக்லிஸ்டில் சேர்க்கப்பட்டால், பரிவர்த்தனை செல்லாது. New Fastag rules implemented from today