Netanyahu rejects Hamas conditions

ஹமாஸ் விதித்த நிபந்தனைகளை நிராகரித்த இஸ்ரேல்

அரசியல் இந்தியா

பணய கைதிகளை விடுவிக்கும் ஹமாஸ் அமைப்பு கூறிய நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வது அவர்களை ஒன்றும் செய்யாமல் அப்படியே விட்டு விடுவதாகும் என  இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு கூறினார்.

காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி வருகிறது. இடையில் தற்காலிக போர் நிறுத்தத்தின்போது ஹமாஸ் அமைப்பினர் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவித்தனர்.

இன்னும் 136 பேர் ஹமாஸ் அமைப்பினரின் பிடியில் இருப்பதாகவும், அவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் இஸ்ரேல் கூறி வருகிறது. Netanyahu rejects Hamas conditions

இந்த நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வந்து பணயக் கைதிகளை விடுவிப்பதற்காக ஹமாஸ் அமைப்பினர் ஓர் ஒப்பந்தத்தை முன்மொழிந்தனர்.

அதில், இஸ்ரேல் தரப்பு தாக்குதலை நிறுத்திவிட்டு படைகளை வாபஸ் பெற வேண்டும், கைதிகளை விடுவிக்க வேண்டும், காசாவில் ஹமாஸ் ஆட்சி நிர்வாகத்தை ஏற்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்றால் பணயக் கைதிகளை விடுவிப்பதாக ஹமாஸ் கூறியிருந்தது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நிராகரித்து விட்டார்

இதுபற்றி விரிவாக பேசியுள்ள இஸ்ரேல் பிரதமர், “ஹமாஸின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வது அவர்களை ஒன்றும் செய்யாமல் அப்படியே விட்டு விடுவதாகும். இஸ்ரேல் வீரர்கள் வீழ்ந்துவிடுவார்கள். ஹமாஸிடம் சரணடையும் வகையிலான இந்த விதிமுறைகளை முற்றிலும் நிராகரிக்கிறேன்.

இதை ஏற்றுக்கொண்டால், மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது. வெளியேற்றப்பட்டவர்களை எங்களால் பாதுகாப்பாக சொந்த ஊருக்கு அழைத்து வர முடியாது. கடந்த ஆண்டு அக்டோபர் 7-ல் நடந்தது போன்று மீண்டும் ஒரு தாக்குதல் நடக்கலாம்” என்றார்.

இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுக்கு பல முனைகளில் இருந்தும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. பணயக் கைதிகளாக ஹமாஸ் பிடியில் இருப்பவர்களை மீட்டு கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் செய்யும்படி அவர்களின் குடும்பத்தினர் ஒருபுறம் வலியுறுத்துகின்றனர். மறுபுறம், ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகள் போரை தீவிரப்படுத்துவதற்கு அழுத்தம் கொடுக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: சேமியா பிர்ணி

அய்யா வழியா? அயோத்தி வழியா?: அப்டேட் குமாரு

அயோத்தியில் தன்னை முன்னிறுத்தும் மோடி: சுப்பிரமணியன் சுவாமி தொடர் தாக்குதல்!

Netanyahu rejects Hamas conditions

+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *