நேபாள விமான விபத்து : 40 பேர் பலி!

இந்தியா

நேபாளத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்துக்கு 68 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் நான்கு பேர் உட்பட 72 பேருடன் வந்த எட்டி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும் போது திடீரென தீ பற்றி விபத்துக்குள்ளானது.

இந்த விமானம் காலை 10:30 மணிக்கு திரிபுவன சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.

இதில் 63 நேபாள குடிமக்களும், ஐந்து இந்தியர்களும், ரஷ்யாவைச் சேர்ந்த 4 பேர், கொரியாவைச் சேர்ந்த இரண்டு பேர், ஆஸ்திரேலியா அர்ஜென்டினா பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து தலா ஒருவர் இருந்ததாக எட்டி ஏர்லைன்ஸ் செய்தி தொடர்பாளர் சுதர்சன் பர்தாவுலா தெரிவித்துள்ளார்.

பொக்காராவில் தரையிறங்கும் போது ஓடுதளத்திலிருந்து விமானம் விலகி சென்றதால் தீ பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விமான விபத்து நடந்த பகுதியில் இருந்து இதுவரை 40 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் ஜெகநாத் நிராவுலா தெரிவித்துள்ளார்.

நேபாள ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் ரதி கிருஷ்ண பிரசாத் பண்டாரி கூறுகையில், பொக்காரா விமான நிலையத்திலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செட்டியாற்றின் பள்ளத்தாக்கு பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளது.
மீட்பு பணியில் 150-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.

விபத்துக்குள்ளான விமானத்திலிருந்து தொடர்ந்து புகை எழுவதால், மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

விமான விபத்தை தொடர்ந்து நேபாள பிரதமர் புஷ்ப கமல் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பிரியா

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *