இளநிலை நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

இளநிலை நீட் தேர்வுக்கு இன்று (மார்ச் 6) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (நீட்) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், 2023ஆம் ஆண்டுக்கான இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான நீட் தேர்வுக்கு இன்று (மார்ச் 6) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

தேர்வர்கள் தேசிய தேர்வு முகமையின் (https://neet.nta.nic.in/) இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளங்கலை படிப்புக்கான நீட் தேர்வு வரும் மே மாதம் 7 ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

2022ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு ஜூலை 17ஆம் தேதி நடந்தது. இந்தத் தேர்வை 17.78 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.

இதில், 9.03 லட்சம் பேர் மருத்துவப் படிப்பில் சேர தகுதி பெற்றனர். தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வில் பங்கேற்றனர். இவர்களில் மொத்தம் 51.3% பேர் (67,787 பேர்) தேர்ச்சி பெற்றனர்.

ராஜ்

வேலைனு வந்துட்டா செந்தில்பாலாஜி: கோவையில் குளிர்வித்த உதயநிதி

நொடியில் உயிர் தப்பிய ஏ.ஆர்.ரகுமான் மகன்

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts