நீட் தேர்வை ரத்து செய்யக் கூடாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம்!

Published On:

| By Kavi

நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்தால் நேர்மையாக தேர்வெழுதிய மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த மே 5ஆம் தேதி நடந்த நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. வரும் ஜூலை 8ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

அதில், யுஜி நீட் தேர்வை மறுபடியும் நடத்த வாய்ப்பில்லை. அப்படி நடத்தினால் நேர்மையாக தேர்வு எழுதிய லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

யுஜி நீட் தேர்வில் முறைகேடுகள், ஏமாற்றுதல், ஆள்மாறாட்டம் போன்ற நிகழ்வுகள் இருந்துள்ளன என்பதை ஒப்புக்கொண்டுள்ள மத்திய கல்வித் துறை அமைச்சகம், வினாத்தாள் கசிந்தது தொடர்பாக தனது பிரமாண பத்திரத்தில் எதையும் குறிப்பிடவில்லை. முழு தேர்வையும் ரத்து செய்வது நியாயமானதாக இருக்காது என்றும் தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு முறைகேடு புகார்களை விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளோம். நியாயமற்ற வழிமுறைகள் தொடர்பான குற்றங்களுக்கு கடும் தண்டனையை புதிய சட்டம் வழங்கும். தேர்வுகளை திறம்பட நடத்துவதற்கு பரிந்துரைகளை வழங்க உயர்மட்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு

தினமும் 70 லட்சம் மதுபாட்டில்கள் விற்பனை : நீதிபதிகள் அதிர்ச்சி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share