நாளை (ஜூன் 23) நடைபெற இருந்த நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
“சில போட்டி தேர்வுகளின் நேர்மை குறித்த சமீபத்திய குற்றச்சாட்டுக்களை கருத்தில் கொண்டு தேசிய தேர்வு வாரியம் (என்டிஏ) நடத்தும் நீட் முதுநிலை நுழைவு தேர்வின் செயல்முறையை மதிப்பீடு செய்ய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதனால் நாளை நடைபெறவிருந்த நீட் முதுநிலை நுழைவு தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது.
புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும். மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள அசெளகரியத்திற்கு சுகாதாரத்துறை அமைச்சகம் வருத்தம் தெரிவிக்கிறது.
மாணவர்களின் நலன் கருதியும் தேர்வு முறையின் புனிதத்தை பாதுகாக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளங்கலை நீட் நுழைவு தேர்வில் கருணை மதிப்பெண் வழங்குவதில் முறைகேடு, வினாத்தாள் கசிவு போன்ற விவகாரங்கள் சர்ச்சையானது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் தேசிய தேர்வு முகமைக்கு கண்டனம் தெரிவித்திருந்தது.
அதேபோல யுஜிசி நெட் தேர்வில் முறைகேடு நடந்தது அம்பலமான நிலையில், அத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்திருந்தது.
இந்தநிலையில் தான் நாளை நடைபெற இருந்த நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹனிமூனுக்கு பதிமூனா? அப்டேட் குமாரு