முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் கட் ஆஃப் மதிப்பெண் பூஜ்யமாக குறைக்கப்பட்டதற்கு எதிராக ரெசிடன்ட் மருத்துவர்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இளநிலை, முதுகலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு நீட் நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நீட் முதுகலை தேர்வில் கட் ஆஃப் மதிப்பெண் பூஜ்யமாக குறைத்து மத்திய மருத்துவ கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதனால் நீட் தேர்வில் ஜீரோ தகுதி மதிப்பெண் பெற்றிருந்தாலும் முதுகலை படிப்பில் சேரலாம். மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் முதுகலை நீட் கட் ஆஃப் மதிப்பெண் பூஜ்யமாக குறைக்கப்பட்டதற்கு எதிராக ரெசிடன்ட் மருத்துவர்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தது.
மருத்துவ மேற்படிப்பிற்கு தனியார் கல்லூரிகள் கட்டணங்களை குறைக்க வேண்டும். நீட் கட் ஆஃப் மதிப்பெண் பூஜ்யமாக குறைத்த உத்தரவு செல்லாது என்று அறிவிக்கக்கோரி தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை இன்றே விசாரிக்க தலைமை நீதிபதி அமர்வு ஒப்புதல் வழங்கியுள்ளது.
செல்வம்
வந்தே பாரத் ரயில் சேவை: பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் கடிதம்!
புரட்டாசி விரதம்: காசிமேடு மீனவர்கள் தவிப்பு!
Instead of making zero percentile, council would have fixed cut off mark as 15 or 20, as there is negative marks also. Further private college quota would have been reduced to 15% instead of the present 50%. This will reduce the pardon for paying hectic fees.
So, all thiefs join together to loot the system by circumventing the earlier admission system. Any new system to be designed to improve the standard and not to dilute it just because there is seat availability. Think otherwise, if more educated unemployed people are there in a system, can you increase the vacancy to accommodate the educated?