18 லட்சத்து 72,341 மாணவ, மாணவிகள் எழுதும் நீட் நுழைவுத் தேர்வு இன்று (மே 7) நாடு முழுவதும் 499 நகரங்களில் நடக்கிறது. தொடர் கலவரம் காரணமாக மணிப்பூரின் இரண்டு மையங்களில் நீட் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நீட் நுழைவுத் தேர்வு இன்று (மே 7) நாடு முழுவதும் 499 நகரங்களில் நடக்கிறது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்தத் தேர்வு மாலை 5.20 மணி வரை நடக்க உள்ளது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் போன்ற மருத்துவப் படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று இருப்பது அவசியம். அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.
2023-24-ம் கல்வியாண்டில் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வை எழுதுவதற்கு நாடு முழுவதிலும் இருந்து 18 லட்சத்து 72,341 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருக்கிறார்கள். இவர்களுக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று (மே 7) நாடு முழுவதும் 499 நகரங்களில் நடக்கிறது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வு மாலை 5.20 மணி வரை நடக்க உள்ளது.
தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கினாலும், தேர்வர்கள் காலை 11 மணியில் இருந்து தேர்வு எழுதும் மையத்துக்கு வரலாம் என்றும், பிற்பகல் 1.30 மணிக்கு தேர்வு மையத்தின் நுழைவு வாயில் பூட்டப்படும் என்றும், 1.30 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) அறிவித்திருக்கிறது.
இந்த நிலையில் மத்திய கல்வி இணை மந்திரி டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங், “மணிப்பூரில் தற்போதுள்ள சூழலில், மாணவர்களால் நீட் தேர்வில் கலந்து கொள்ள முடியாது. ஏனெனில், பிராட்பேண்ட் மற்றும் இணையதள இணைப்பு பிரச்சினை ஏற்படும். அதனால், தேசிய தேர்வு முகமையிடம் தேர்வு தேதியை மாற்றி அறிவிக்கவோ அல்லது தள்ளி வைக்கவோ செய்யும்படி கேட்டுக்கொண்டேன். இதன்படி தேர்வு தள்ளிவைப்பு பற்றிய அறிக்கையை என்.டி.ஏ. வெளியிட்டுள்ளது. 5,751 தேர்வர்கள் மணிப்பூரின் இரண்டு மையங்களில் தேர்வு எழுத இருந்தனர். தேர்வுக்கான புதிய தேதி முடிவு செய்யப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.
ராஜ்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: ஐஸ்க்ரீம், கூல் டிரிங்ஸ் சாப்பிட்டதும் சளி… தீர்வு உண்டா?